ஆயுஷ்

ஆயுஷ் 64: லேசான மற்றும் மிதமான கொவிட்-19 தொற்று நோயாளிகளுக்கான சிறந்த நிவாரணி

Posted On: 29 APR 2021 1:53PM by PIB Chennai

பெருந்தொற்றின் இரண்டாவது அலையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்தச் சூழலில், லேசான மற்றும் மிதமான கொவிட்-19 தொற்று கண்டறியப்பட்டுள்ள நோயாளிகளுக்கு ஆயுஷ்-64, ஓர் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

ஆயுஷ் அமைச்சகத்தின் ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்தியக் குழு, பல்வேறு மூலிகைகளிலிருந்து தயாரித்த ஆயுஷ்-64 என்ற மருந்து, அறிகுறிகள் அல்லாத, லேசான மற்றும் மிதமான கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளவர்களுக்கான சிகிச்சையில் நல்ல பலன் அளிப்பதாக நாட்டின் பிரபல ஆராய்ச்சி நிறுவனங்களின் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

லேசானது முதல் மிதமானது வரையிலான தொற்று உள்ள நோயாளிகளுக்கு ஆயுஷ் 64 மருந்தை வழங்கி அதன் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்ய, பலதரப்பட்ட மருத்துவ சோதனைகளை, ஆயுஷ் அமைச்சகம்- அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மன்றம்‌ (சிஎஸ்ஐஆர்) ஆகியவை அண்மையில் வெற்றிகரமாக நிறைவு செய்தன.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கொவிட்- 19 மேலாண்மைக்கான தேசிய பணிக் குழு, ஆயுர்வேதம் மற்றும் யோகாவின் அடிப்படையில் தேசிய மருத்துவ மேலாண்மை நெறிமுறைகளுள் இந்த மருந்தை பரிந்துரைத்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1714815

*****************(Release ID: 1714851) Visitor Counter : 206