சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

15 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இந்திய அரசு இது வரை இலவசமாக வழங்கியுள்ளது

Posted On: 27 APR 2021 7:27PM by PIB Chennai

பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை மற்றும் சரியான கொவிட் தடுப்பு  நடத்தை விதிமுறை ஆகியவற்றை உள்ளடக்கிய பெருந்தொற்றை எதிர்த்து போராடுவதற்கான இந்திய அரசின் ஐந்து அம்ச திட்டத்தில் முக்கிய அம்சமாக திகழ்வது தடுப்பு மருந்து வழங்கல் ஆகும்.

2021 ஜனவரி 16 அன்று உலகின் மாபெரும் தடுப்புமருந்து வழங்கல் திட்டத்தை இந்தியா தொடங்கியது.

2021 மே 1 முதல் பரவலாக்கப்பட்ட மற்றும் விரிவுபடுத்தப்பட்ட மூன்றாம் கட்ட கொவிட்-19 தடுப்புமருந்து திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தடுப்பு மருந்தின் விலையை தாராளமயமாக்கவும், அதிகம் பேரை தடுப்பு மருந்து சென்றடையவும் மூன்றாம் கட்ட தடுப்புமருந்து திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.

பரவலாக்கப்பட்ட தடுப்புமருந்து திட்டத்தின் கீழ் தடுப்பூசிகளின் கொள்முதல், தகுதியான வயது மற்றும் தடுப்பு மருந்து வழங்கல் ஆகியவை இணக்கமான வழிமுறைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன.

15 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை (15,65,26,140) மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இந்திய அரசு இது வரை இலவசமாக வழங்கியுள்ளது. இவற்றில் 14,64,78,983 டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன (வீணான தடுப்பு மருந்துகளையும் சேர்த்து).

ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் (1,00,47,157) இன்னும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிடம் கைவசம் இருக்கின்றன. அடுத்த 3 நாட்களில் 80 லட்சத்துக்கும் அதிகமன (86,40,000) தடுப்பு மருந்துகள் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களை சென்றடையவுள்ளன.

மகாராஷ்டிராவில் தடுப்பு மருந்துகள் தீர்ந்து விட்டதென்றும், இதனால் அம்மாநிலத்தில் தடுப்பு மருந்து வழங்கல் பாதிக்கப்பட்டுள்ளதென்றும் சில அரசு அதிகாரிகள் சொன்னதாக சில ஊடக செய்திகள் சமீபத்தில் தெரிவித்தன. 2021 ஏப்ரல் 27 அன்று (காலை 8 மணிக்கு) மகாராஷ்டிராவால் பெற்றுக்கொள்ளப்பட்ட கொவிட் தடுப்பு மருந்து டோஸ்களின் மொத்த எண்ணிக்கை 1,58,62,470 என்று தெளிவுப்படுத்தப்படுகிறது.

இவற்றில், வீணாதல் (0.22%) உள்ளிட்ட மொத்த நுகர்வு 1,49,39,410 ஆகும். எஞ்சிய 9,23,060 தகுதியுடைய மக்களுக்கு வழங்கப்படுவதற்காக அந்த மாநிலத்திடம் உள்ளன.

மேலும், இன்னும் 3 நாட்களில் 3,00,000 டோஸ்கள் கொவிட் தடுப்புமருந்து வழங்கப்படும்.

-----


(Release ID: 1714433) Visitor Counter : 268