பாதுகாப்பு அமைச்சகம்
கொவிட்- 19 நிவாரண பணிகளில் இந்திய விமானப்படை
Posted On:
24 APR 2021 5:07PM by PIB Chennai
கொவிட்-19 நிவாரணப் பணிகளில் இந்திய விமானப்படை தொடர்ந்து முழுவீச்சில் செயலாற்றி வருகிறது.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஓர் சி-17 ரக விமானம், 2021 ஏப்ரல் 24 அன்று அதிகாலை 2 மணிக்கு ஹிந்தன் விமான தளத்தில் இருந்து சிங்கப்பூரின் சாங்கி சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்டது. இந்த விமானம் 7:45 மணிக்கு சிங்கப்பூர் சென்றடைந்தது. 4 கொள்கலன்களில் கிரையோஜெனிக் பிராணவாயுவை நிரப்பிக்கொண்டு அந்த விமானம் சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு பனாகர் விமான தளத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
மற்றொரு சி-17 ரக விமானம், ஹிந்தன் தளத்திலிருந்து புனே தளத்திற்குக் காலை 8 மணிக்குப் புறப்பட்டது. காலை 10 மணிக்கு புனே சென்றடைந்த அந்த விமானம், இரண்டு கொள்கலன் டாங்கிகளில் கிரையோஜெனிக் பிராணவாயுவை நிரப்பிக்கொண்டு ஜாம்நகர் விமான தளத்தை வந்தடைந்தது. அதே சி-17 ரக விமானம் தற்போது இரண்டாவது முறையாக புனேவில் இருந்து ஜாம்நகர் வரை கூடுதலாக 2 கொள்கலன்களுடன் பயணிக்கிறது.
முன்னதாக ஜோத்பூரில் இருந்து ஜாம்நகருக்கு இரண்டு காலி கொள்கலன்களை ஓர் சி-17 ரக விமானம் ஏற்றிச் சென்றது.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஓர் சினூக் ஹெலிகாப்டரும் ஏ என் 32 ரக விமானமும் கொவிட் பரிசோதனைக் கருவிகளை ஜம்முவில் இருந்து லேவுக்கும், ஜம்முவில் இருந்து கார்கிலுக்கும் முறையே கொண்டுச் சென்றன. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றம் தயாரித்த இந்தக் கருவிகள், லடாக் யூனியன் பிரதேசத்தில் பரிசோதனையை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1713783
-------
(Release ID: 1713806)
Visitor Counter : 206