குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

மகாவீரர் ஜெயந்தி முன்னிட்டு மக்களுக்கு குடியரசுத் துணை தலைவர் வாழ்த்து

Posted On: 24 APR 2021 4:53PM by PIB Chennai

மகாவீரர் ஜெயந்தி முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைதலைவர் திரு எம் வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்து செய்தி பின்வருமாறு:

மகாவீரர் ஜெயந்தி புனித நன்னாளை முன்னிட்டு நமது நாட்டு மக்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அகிம்சை, கருணை மற்றும் தன்னலமற்ற தன்மை போன்ற அவரது போதனைகளின் மூலம் நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சிக்கான ஒளிமிகுந்த வழிகளை மனிதகுலத்திற்கு பகவான் மகாவீரர் காட்டினார். சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை போதித்த நமது நாட்டின் மிகப்பெரிய இறைத்தூதர்களில் அவர் ஒருவராவார்.

சமணர்களின் முக்கிய பண்டிகையான மகாவீரர் ஜெயந்தி இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் உற்சாகத்தோடு கொண்டாடப்படுகிறது. பக்தர்களின் கொடைப் பணிகள், ஸ்தவன்களை வாசித்தல், தேரில் இறைவனின் ஊர்வலம் மற்றும் சமண முனிவர்களின் ஆன்மீக சொற்பொழிவு ஆகியவை இந்த பண்டிகையின் சிறப்பம்சங்கள் ஆகும்.

ஆனால் தற்போதைய கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு, கொவிட் சுகாதாரம் மற்றும் தூய்மை விதிமுறைகளை பின்பற்றி இப்பண்டிகையை வீட்டிலேயே கொண்டாடுமாறு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.

பகவான் மகாவீரரின் போதனைகளை பின்பற்றி கொரோனாவுக்கு எதிரான பொதுவான போரில் நமது பங்களிப்பை வழங்குவோம். பகவான் மகாவீரரின் அறிவுரைகளை உள்வாங்கிக்கொண்டு, அமைதியான, ஒற்றுமையான மற்றும் சமமான சமுதாயத்தை கட்டமைக்க நாம் உறுதி ஏற்போம்.

------


(Release ID: 1713802) Visitor Counter : 203