குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
ராம நவமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து
Posted On:
20 APR 2021 4:42PM by PIB Chennai
ராம நவமியை முன்னிட்டு குடியரசுத் துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது:
புனிதத் திருநாளான ‘ராம நவமியை' முன்னிட்டு நம் நாட்டு மக்களுக்கு எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒழுக்கம், நேர்மை, வீரம் மற்றும் இரக்கத்தின் எடுத்துக்காட்டாக பகவான் ராமர் விளங்கினார். இறைவன் ராமரின் வாழ்க்கைத் தத்துவங்களை ராமநவமி நமக்கு நினைவூட்டுவதுடன், அவர் வகுத்துத்தந்த ஒழுக்கத்தின் பாதையில் நம்மை வழிநடத்திச் செல்கிறது. நமது குடும்பம், சமூகம் மற்றும் நாட்டின் மீதான நமது கடமைகளையும் பொறுப்புகளையும் நம் ஒவ்வொருவருக்கும் அது நினைவூட்ட வேண்டும்.
நீதி, சிறந்த ஆளுகை, நாட்டு மக்களின் நல்வாழ்விற்காக இறைவன் ராமர் கொண்டிருந்த உறுதித்தன்மை, மனித சமூகத்திற்குத் தொடர்ந்து எப்போதும் ஊக்கமளிக்கும்.
நமது நாட்டில் நண்பர்களும் உறவினர்களும் இணைந்து கொண்டாடும் சிறந்த தருணமாக பண்டிகைகள் விளங்குகின்றன.
ஆனால் கொவிட்-19 பெருந்தொற்றின் நிலையைக் கருத்தில் கொண்டு, கொவிட் ஆரோக்கிய மற்றும் சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றி, தங்கள் வீடுகளிலேயே இந்தப் பண்டிகையை கொண்டாடுமாறு எனது சக குடிமக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
இந்தத் திருநாள், நமது வாழ்வில் மகிழ்ச்சியையும் அமைதியையும் ஏற்படுத்தி, பகவான் ராமரின் ஒளிமயமான பாதையில் நம்மை செலுத்தி, அவர் வாழ்ந்த கொள்கைகளின் அடிப்படையிலான உலகை உருவாக்கட்டும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1712898
*****************
(Release ID: 1712997)
Visitor Counter : 184