பாதுகாப்பு அமைச்சகம்

விடுதலையின் அம்ருத் மகோத்சவம்: ஜாலியன் வாலாபாக் தியாகிகளை தேசிய மாணவர் படை நினைவு கூர்ந்தது

Posted On: 13 APR 2021 5:50PM by PIB Chennai

1919-ம் ஆண்டு இதே நாள், அதாவது ஏப்ரல் 13 அன்று, தமது இன்னுயிரை நீத்த ஜாலியன் வாலாபாக் தியாகிகளுக்கு தேசிய மாணவர் படை இன்று அஞ்சலி செலுத்தியது. நாடு தனது 75-வது சுதந்திர ஆண்டை விடுதலையின் அம்ருத் மகோத்சவம் எனும் பெயரில் கொண்டாடி வரும் நிலையில், இன்றைய நிகழ்ச்சி நடைபெற்றது.

14 லட்சம் மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தேசிய மாணவர் படையின் அணியினர் நாடு முழுவதும் 75 இடங்களில் ஒன்று கூடி தேசபக்தி மிக்க பாடல்கள், உரைகள் மற்றும் நாடகங்கள் உள்ளிட்டவற்றின் மூலம் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு நன்றி செலுத்தினர். உள்ளூர் மக்கள் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நிலையில் நாட்டுப்பற்று மிக்க சூழல் பல இடங்களில் உண்டானது. #NCCremembersJallianwala எனும் ஹேஷ் டாகுடன் சமூக வலைதளங்களிலும் தகவல்கள் பகிரப்பட்டன.

மேலும், இந்த நிகழ்ச்சியின் போது ஒரு முறை பயன்படுத்தக்கூடிய நெகிழிகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய மாணவர் படை தொடங்கியது. #NCCagainstPlastic எனும் தலைப்பில் சமூக ஊடகங்களிலும் செய்திகள் பகிரப்பட்டன.

சீருடையணிந்த இளைஞர்களின் முன்னணி அமைப்பான தேசிய மாணவர் படை, தேசத்தின் கட்டமைப்புக்கு ஆரம்பத்திலிருந்தே பங்காற்றியுள்ளது. பல லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையை ஒற்றுமை மற்றும் ஒழுக்கம் ஆகிய வழிகளின் மூலம் இது மாற்றியமைத்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1711508

*****************



(Release ID: 1711557) Visitor Counter : 227