வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

பதிப்புரிமை திருத்த விதிமுறைகள், 2021 அறிவிப்பு: பொறுப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கும்

Posted On: 08 APR 2021 3:53PM by PIB Chennai

பதிப்புரிமை சட்ட திருத்த விதிமுறைகள் 2021-, கடந்த மார் 30ம் தேதியிட்ட அரசிதழ் எண் ஜி.எஸ்.ஆர் 225-ன் கீழ் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பதிப்புரிமை, பதிப்புரிமை சட்டம் 1957 மற்றும் பதிப்புரிமை விதிமுறைகள் 2013-ன் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.   பதிப்புரிமை விதிமுறைகள் 2013 கடைசியாக கடந்த 2016ம் ஆண்டு திருத்தப்பட்டது.

தற்போதுள்ள விதிகளைசம்பந்தப்பட்ட இதர சட்டங்களுக்கு இணையாக கொண்டுவரும் நோக்கில் இந்த திருத்தங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. பதிப்புரிமை அலுவலகத்தில் மின்னனு தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணியாற்றுவதன் மூலம் டிஜிட்டல் யுகத்தில் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப சுமூகமான மற்றும் குறைபாடற்ற இணக்கத்தை உறுதி செய்வதை இந்த திருத்தம் நோக்கமாக கொண்டுள்ளது.  பதிப்புரிமை இதழை வெளியிடுவது தொடர்பான புதிய விதிமுறை சேர்க்கப்பட்டுள்ளது. இதன் முலம் அரசிதழில் வெளியிடவேண்டிய தேவை நீக்கப்படுகிறது.  இனி அந்த இதழ் பதிப்புரிமை அலுவலகத்தின் இணையதளத்தில் கிடைக்கும்.

உரிமைத் தொகை  விஷயத்தில் பொறுப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிப்பதற்காக புதிய விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பதிப்புரிமை சங்கங்களின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவர, புதிய விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பதிப்புரிமை சங்கங்கள், ஒவ்வொரு நிதியாண்டும், வருடாந்திர வெளிப்படைத்தன்மை அறிக்கையை வெளியிட வேண்டும்.

இந்த திருத்தங்கள் பதிப்புரிமை விதிமுறைகளை, நிதிசட்டம் 2017, விதிமுறைகளுக்கு இணையாக ஆக்கியுள்ளது. இதன் மூலம் பதிப்புரிமை வாரியம்மேல் முறையீடு வாரியத்துடன் இணைக்கப்படுகிறது.

ஒரு பதிப்புரிமை நிறுவனம் பதிவு செய்யும்போது, அதற்கு மத்திய அரசு பதில் அளிப்பதற்கான காலவரம்பு 180 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விண்ணப்பத்தை மத்திய அரசால் விரிவாக பரிசீலிக்க முடியும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1710417

 

*****************


(Release ID: 1710476) Visitor Counter : 587