மத்திய பணியாளர் தேர்வாணையம்

ஒருங்கிணைந்த மருத்துவ பணிகள் தேர்வு 2020 முடிவுகள் வெளியீடு

Posted On: 30 MAR 2021 4:13PM by PIB Chennai

மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தால் 2020 அக்டோபர் 22-ஆம் தேதி கணினி வழியாக (பகுதி- I) நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த மருத்துவ பணிகள் தேர்வு 2020 மற்றும் அதனைத் தொடர்ந்து 2021 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை நடைபெற்ற ஆளுமைத் திறன் தேர்வு (பகுதி- II) ஆகியவற்றின் அடிப்படையில் கீழ்காணும் இரண்டு பிரிவுகளில் உள்ள பணிகளுக்கும், இடங்களுக்கும் தேர்வாளர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

பிரிவு 1

மத்திய மருத்துவ சேவையில் இளநிலை இடங்கள்

பிரிவு 2:

i.        ரயில்வேயில் வட்டார உதவி மருத்துவ அலுவலர்

ii.       இந்தியத் தளவாடங்கள் தொழிற்சாலை மருத்துவப் பணியில் உதவி மருத்துவ அலுவலர்

iii.      புதுதில்லி நகராட்சி கவுன்சிலில் பொது மருத்துவ அலுவலர்

iv.      தில்லி கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கு முனிசிபல் கழகங்களில் பொது மருத்துவ அலுவலர் - II நிலை

பிரிவு 1-இல்  179 தேர்வாளர்களும், பிரிவு 2-இல் 343 தேர்வாளர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

முடிவுகளை www.upsc.gov.in  என்ற மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் இணைய தளத்திலும் காணலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1708482

•••••


(Release ID: 1708513) Visitor Counter : 187