சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த உதவுவதற்காக உயர்மட்ட சுகாதாரக் குழுக்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது

Posted On: 06 MAR 2021 2:19PM by PIB Chennai

மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த உதவுவதற்காக உயர்மட்ட பல்துறை பொது சுகாதாரக் குழுக்களை அம்மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது.

கொவிட்-19 கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில சுகாதாரத் துறைகளுக்கு உதவுவதற்காக இக்குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவின் மூத்த தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பி ரவீந்திரன் மகாராஷ்டிராவுக்கு அனுப்பப்பட்டுள்ள குழுவிற்கு தலைமை ஏற்றுள்ளார்.

புது தில்லியில் உள்ள தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குநர் டாக்டர் எஸ் கே சிங் பஞ்சாப்பிற்கு அனுப்பப்பட்டுள்ள குழுவிற்கு தலைமை ஏற்றுள்ளார்.

மேற்கண்ட மாநிலங்களில் உள்ள பாதிப்புகள் அதிகமுள்ள பகுதிகளில் தங்களது ஆய்வை உடனடியாக மேற்கொள்ளவிருக்கும் இக்குழுவினர், தங்களது ஆலோசனைகளை தலைமை செயலாளர்/சுகாதார செயலாளருக்கு வழங்குவார்கள்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1702862

*****************



(Release ID: 1702911) Visitor Counter : 178