தேர்தல் ஆணையம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிக்கை

Posted On: 05 MAR 2021 5:35PM by PIB Chennai

மேற்குவங்க சட்டமன்ற தேர்தலுக்கு பொறுப்பாளராக இருக்கும் துணைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி மேற்குவங்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுதிய கடிதத்தை சில செய்திகள் இன்று (2021 மார்ச் 5) சுட்டிக்காட்டி இருந்தன.

மேற்குவங்க தலைமை தேர்தல் அதிகாரியிடம் அளிக்கப்பட்ட புகாரின் நகலை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அவர் அனுப்பியிருந்தார்.

ஆணையத்தின் தலைமையகம் மற்றும் களத்தில் உள்ள அனைத்து துணைத் தேர்தல் ஆணையர்கள் மற்றும் இதர அலுவலர்கள், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படியும், தேர்தல் நடத்தை விதிகளின் படியும் தான் பணியாற்றுகிறார்கள் என்பதை தெளிவுப்படுத்த ஆணையம் விரும்புகிறது.

எங்கேனும் ஒன்றிரண்டு குறைபாடுகள் தென்பட்டால் தேர்தல் ஆணையம் உடனடியாக அதை சரி செய்கிறது.

ஆனால், இது போன்ற புகார்கள் மற்றும் பிரச்சாரம் தேர்தலுக்கு முன்பு செய்யப்படுவது இது முதல் முறை அல்ல.

மேற்கண்ட செய்தியை பொருத்தவரை, துணைத் தேர்தல் ஆணையர் திரு. சுதீப் ஜெயினின் நேர்மை மற்றும் நியாயமான செயல்பாடுகள் மீது ஆணையத்திற்கு முழு நம்பிக்கை உள்ளது.

2019 நாடாளுமன்ற தேர்தலின் போது, அவர் எடுத்த இரு முடிவுகளும் தேர்தல் நியாயமாகவும், அமைதியாகவும் நடைபெற வேண்டும் என்ற நோக்கத்துடன்  எடுத்தவையே என தெளிவுபடுத்தப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1702712

**************


(Release ID: 1702742) Visitor Counter : 170
Read this release in: English , Urdu , Hindi , Telugu