குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

நவீன சுகாதார பரிசோதனை, சிகிச்சை வசதிகளை குறைந்த செலவில் ஊரக பகுதிகளுக்கு வழங்குவதற்காக தனியார்துறை, அரசுடன் கைகோர்க்க குடியரசு துணைத் தலைவர் அழைப்பு

Posted On: 04 MAR 2021 4:40PM by PIB Chennai

 

சுகாதார உள்கட்டமைப்பில் நகர்ப்புற- ஊரக இடைவெளி குறித்து வருத்தம் தெரிவித்துள்ள குடியரசு துணைத் தலைவர் திரு. எம் வெங்கையா நாயுடு, நவீன சுகாதார பரிசோதனை மற்றும் சிகிச்சை வசதிகளை குறைந்த செலவில் ஊரக பகுதிகளுக்கும் வழங்குவதற்காக தனியார்துறை, அரசுடன் கைகோர்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

ஊரக பகுதிகளில் வாழும் மக்கள் நவீன சுகாதார வசதிகளை தங்களது கிராமங்களிலேயே பெறுவதற்கு இந்த இடைவெளியை நீக்குவது அவசியம்”, என்று வலியுறுத்திய அவர், “போதிய மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால் நமது கிராமங்களில் ஒருவரும் பாதிக்கப்படக்கூடாதுஎன்று கூறினார்.

திருப்பதியில் உள்ள அமரா மருத்துவமனையை இன்று தொடங்கி வைத்துப் பேசிய அவர்கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்று, தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் சுகாதாரத் துறைக்கு ரூ. 2,23,846 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதை அவர் பாராட்டினார்.

நமது சவால்மிக்க தருணங்களில் மருத்துவர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், சுகாதார, துப்புரவு ஊழியர்கள், ஆஷா பணியாளர்களின் தன்னலமற்ற சேவைக்கும், தியாகத்திற்கும் நாடு என்றும் கடமைப்பட்டுள்ளது”, என்று தெரிவித்த திரு வெங்கையா நாயுடு, நோய்த்தொற்று காலத்தில் காவல்துறையினர், ஊடகப்பிரிவினரின் பணியையும் பாராட்டினார்.

கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசிகளை, ஏராளமான நாடுகளுக்கும் இந்தியா  விநியோகம் செய்துள்ளது என்றும், இதன்மூலம் உலகின் மருந்தகமாக விளங்கும் இந்தியாவின் புகழ் மேலும் வலுப்பெற்றிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தரமான சுகாதாரம் கிடைக்கப்பெறுவது ஒவ்வொரு தனிநபரின் உரிமை என்று வலியுறுத்திய குடியரசு துணைத் தலைவர், நோயாளிகளின் பாதிப்பைக் குறைக்கவும் மருத்துவ பணியாளர்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1702463

***************



(Release ID: 1702515) Visitor Counter : 176