குடியரசுத் தலைவர் செயலகம்

குரு ரவிதாஸ் பிறந்த தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவரின் வாழ்த்து செய்தி

प्रविष्टि तिथि: 26 FEB 2021 5:23PM by PIB Chennai

குரு ரவிதாஸின் பிறந்த நாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

குரு ரவிதாஸின் புனித பிறந்த நாளில், அனைத்து மக்களுக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று தமது வாழ்த்து செய்தியில் குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.

மிகப்பெரிய ஞானியாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் குரு ரவிதாஸ் திகழ்ந்தார் என்று கூறிய திரு. கோவிந்த், மனிதகுலத்துக்கு சேவை செய்வதற்காக குரு ரவிதாஸ் தமது வாழ்க்கையை அர்ப்பணித்ததாக தெரிவித்தார்.

சமத்துவம், நீதி, அமைதி மற்றும் நல்லிணக்கம் ஆகியவை குறித்து தமது போதனைகள் மூலம் மனிதகுலத்துக்கு அவர் எடுத்துரைத்தார்.

சமூக நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை ஊக்குவிக்க தமது வாழ்நாள் முழுவதும் அவர் பணியாற்றினார்.

இத்தகைய மாபெரும் ஞானியின் பிறந்த நாளில், அவரது போதனைகளில் இருந்து ஊக்கம் பெற்று மனித குலத்தின் நன்மைக்காக

சமுதாயத்தை வலுப்படுத்துவதற்கு பாடுபட நாம் உறுதி ஏற்போம் என்று குடியரசுத் தலைவர் மேலும் தெரிவித்தார்.

*****************


(रिलीज़ आईडी: 1701160) आगंतुक पटल : 169
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Odia