நிதி அமைச்சகம்

பிரிக்ஸ் நாடுகளின் நிதி மற்றும் மத்திய வங்கிகளின் துணைத் தலைவர்களின் முதல் கூட்டத்தை இந்தியா நடத்தியது

Posted On: 24 FEB 2021 6:16PM by PIB Chennai

பிரிக்ஸ் நாடுகளின் நிதி மற்றும் மத்திய வங்கிகளின் துணைத் தலைவர்களின் முதல் கூட்டத்தை காணொலி மூலம் இந்தியா இன்று நடத்தியது.

நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் செயலாளர் திரு தருண் பஜாஜ், இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திரு மைக்கேல் பத்ரா ஆகியோர் இதற்கு தலைமை தாங்கினர்.

பிரேசில், ரஷ்யா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்காவின் பிரிக்ஸ் நிதி மற்றும் மத்திய வங்கிகளின் துணை தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தனது 15-வது ஆண்டு விழாவை பிரிக்ஸ் கொண்டாடும் 2021-ல் பிரிக்ஸ் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றது.

பிரிக்ஸ்@15: பிரிக்ஸ் நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு என்பதை மையக்கருவாகக் கொண்டு, தொடர்நிலை, ஒருங்கிணைப்பு மற்றும் ஒப்புதல் ஆகியவற்றின் மூலம் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இந்தியா கவனம் செலுத்துகிறது.

2021-ம் ஆண்டில் இந்தியாவின் தலைமையில் நடைபெறும் முதல் பிரிக்ஸ் ஒத்துழைப்பு கூட்டம் இதுவாகும். நிதி ஒத்துழைப்பு லட்சியம், சர்வதேச பொருளாதார கண்ணோட்டம், கொவிட்-19-க்கான எதிர்வினை, உள்கட்டமைப்பு வசதிகளுக்கு நிதி வழங்குதல், டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல், புதிய வளர்ச்சி வங்கியின் நடவடிக்கைகள், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிதி தொழில்நுட்பம் மற்றும் நிதி உள்ளடக்கம், பிரிக்ஸ் அவசர கால தயார்நிலை குறித்த முன்னுரிமைகளை இந்தியா இக்கூட்டத்தின் போது பகிர்ந்து கொண்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1700502

-----



(Release ID: 1700604) Visitor Counter : 200