எரிசக்தி அமைச்சகம்

பெரிய அணைகளுக்கான சர்வதேச ஆணையத்தின், அணைகள் மற்றும் ஆற்றுப் படுகைகளின் நீடித்த வளர்ச்சி குறித்த கருத்தரங்கம்

Posted On: 24 FEB 2021 3:05PM by PIB Chennai

பெரிய அணைகளுக்கான சர்வதேச ஆணையத்தின், அணைகள் மற்றும் ஆற்றுப் படுகைகளின் நீடித்த வளர்ச்சி குறித்த கருத்தரங்கை மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு .கஜேந்திர சிங் ஷெகாவத் தொடங்கி வைத்தார்.

மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு. ஆர் கே சிங் இன்று நடைபெற்ற தொடக்க விழாவுக்கு தலைமை வகித்தார்.

மத்திய மின்சார அமைச்சகத்தின் செயலாளர் திரு. அலோக் குமார், ஜல் சக்தி அமைச்சகத்தின் செயலாளர் திரு. பங்கஜ் குமார், மத்திய மின்சார ஆணையத்தின் தலைவர் திரு. பிரகாஷ் எஸ் மாஸ்கே, மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் திரு. எஸ் கே ஹல்தார் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மின்சாரத்துறை அமைச்சர், நீர், சூரிய சக்தி, காற்று மற்றும் உயிரி எரிசக்தி ஆகிய மரபுசாரா ஆதாரங்களை கொண்டு நமது எரிசக்தி வளங்களை நாம் விரிவுபடுத்தி வருகிறோம் என்று கூறினார்.

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திற்கு இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு குறித்து அவர் எடுத்துரைத்தார்.

 

43 நாடுகளின் தேசிய மற்றும் சர்வதேச அணை நிபுணர்களிடம் இருந்து 285 தொழில்நுட்ப கட்டுரைகள் இக்கருத்தரங்கிற்காக சமர்ப்பிக்கப்பட்டன.

2021 பிப்ரவரி 27 அன்று காணொலி மூலம் நடக்கும் 27 தொழில்நுட்ப அமர்வுகளில் 130 விளக்கக் காட்சிகள் இடம் பெறும்.

அணைகள் மற்றும் ஆற்றுப்படுகைகளின் மேம்பாட்டில் 21-ஆம் நூற்றாண்டில் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் குறித்த கண்காட்சி ஒன்றும் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1700418



(Release ID: 1700511) Visitor Counter : 173