பாதுகாப்பு அமைச்சகம்

கிழக்கு பிராந்திய கடற்படை தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் தருண் சோப்தி பொறுப்பேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 23 FEB 2021 3:19PM by PIB Chennai

கிழக்கு பிராந்திய கடற்படை தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் தருண் சோப்தி, இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் நடைபெற்ற பொறுப்பேற்பு நிகழ்ச்சியில் ரியர் அட்மிரல் சஞ்சய் வத்ஸ்யனிடமிருந்து அவர் இந்த பொறுப்பைப் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது அவருக்கு அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.


இவர் இந்திய கடற்படையில் கடந்த 1988-ஆம் ஆண்டு சேர்ந்தார். கடக்வஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமி, பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் உள்ள பாதுகாப்பு மையம், மும்பையின் கடற்படை கல்லூரி ஆகியவற்றில் ரியர் அட்மிரல் தருண் சோப்தி பயிற்சி பெற்றுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1700179 


(வெளியீட்டு அடையாள எண்: 1700319) வருகையாளர் எண்ணிக்கை : 275
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी