நிதி அமைச்சகம்

அசாம் மாநிலத்தில் மின் பரிமாற்ற அமைப்பின் திறன் மேம்பாட்டுக்கு 304 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் ஒப்பந்தம்

Posted On: 23 FEB 2021 5:59PM by PIB Chennai

அசாம் மாநிலத்தில் மின் பரிமாற்ற நெட்வொர்க்கின் நம்பகத்தன்மை, திறன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, 304 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் மத்திய அரசு மற்றும் ஆசியன் உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (Asian Infrastructure Investment Bank (AIIB) ஆகியவை கையெழுத்திட்டுள்ளன.

இத்திட்டம் மூலம் அசாமில் மின் பரிமாற்ற துணை நிலையங்கள் அமைக்கப்படும். தற்போதுள்ள 15 துணை மின் நிலையங்கள் மேம்படுத்தப்படும். பூமிக்கு அடியில் கொண்டு செல்லப்படும், மின் வயர்கள், ஆப்டிக்கல் மின் வயர்களாக மாற்றப்படும்.
அசாம் மாநிலத்தில் தற்போதுள்ள உள்ள மின் பகிர்வு கட்டமைப்புகள், 24 மணி நேரமும் மின் விநியோகம் இருக்கும் வகையில் வலுப்படுத்தப்படும்.
இந்த கடன் ஒப்பந்தத்தில் மத்திய அரசு சார்பில் பொருளாதார விவாகரத்துறை இணை செயலாளர் திரு பல்தியோ புருசர்தா, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி சார்பில் அதன் தலைமை இயக்குனர் பொறுப்பு வகிக்கும் திரு ராஜத் மிஸ்ரா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இத்திட்டத்தின் மொத்த செலவு 365 மில்லியன் அமெரிக்க டாலர். இதில் 304 மில்லியன் டாலர் நிதியை ஏஐஐபி வங்கி அளிக்கும். 61 மில்லியன் டாலர் நிதியை அசாம் அரசு செலவிடும். 304 மில்லியன் அமெரிக்க டாலர் கடனை 24 ஆண்டுகளுக்குள் செலுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1700238



(Release ID: 1700317) Visitor Counter : 155


Read this release in: English , Urdu , Hindi , Assamese