பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
மாலத்தீவு - இந்தியா இடையே ‘பெருந்தொற்று காலத்தில் சிறந்த நிர்வாக நடைமுறைகள்’ பற்றிய 2 நாள் பயிலரங்கு: நாளை தொடக்கம்
Posted On:
22 FEB 2021 5:18PM by PIB Chennai
மாலத்தீவு சிவில் சர்வீஸ் கமிஷன், மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறையின் சிறந்த நிர்வாகத்துக்கான தேசிய மையம் இடையே ‘பெருந்தொற்று காலத்தில் சிறந்த நிர்வாக நடைமுறைகள்’ பற்றிய 2 நாள் மெய்நிகர் பயிலரங்கு நாளை தொடங்குகிறது.
இந்த பயிலரங்கில், மாலத்தீவைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர். தொற்று காலத்தில் மாலத்தீவில் சுகாதாரம் மற்றும் கல்வி, தலைமை மற்றும் ஊக்கம், தொற்று காலத்தில் இந்தியாவில் சுகாதாரத்துறை செயல்பாடுகள், வேலை திறன்கள் மற்றும் சுற்றுலா, டிஜிட்டல் நடைமுறைகள் உட்பட பல விஷயங்கள் குறித்து இதில் விவாதிக்கப்படுகிறது.
இரு நாடுகளும் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் தளமாக இந்த பயிலரங்கம் இருக்கும்.
மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. அப்துல்லா சாஹித் இதில் பங்கேற்கிறார். இரு நாட்டு மூத்த அதிகாரிகளும், இதில் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.
இந்த பயிலரங்கை மாலத்தீவுக்கான இந்திய தூதர் திரு. சஞ்சய் சுதிர், மாலத்தீவு சிவில் சர்வீஸஸ் கமிஷன் தலைவர் திரு. முகமது நாசிக் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
இந்த பயிலரங்கில் தலைமை விருந்தினராக மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சி துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1699960
(Release ID: 1700003)
Visitor Counter : 174