அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

தகவல் தொழில்நுட்பம், வளங்களின் முறையான பயன்பாடு, மின்சார இயக்கத்தில் கவனம் செலுத்தி திட்டம் சார்ந்த பணிகளை உருவாக்குகிறது அறிவியல், தொழில்நுட்பம் தொடர்பான இந்திய- ஐக்கிய ஐரோப்பிய கூட்டுக் குழு

Posted On: 22 FEB 2021 12:23PM by PIB Chennai

ஐரோப்பிய ஆணையம் அண்மையில் ஏற்பாடு செய்திருந்த அறிவியல் தொழில்நுட்பத்தில், ஒத்துழைப்பு குறித்த 13-வது கூட்டுக் குழு கூட்டத்தில், ஆராய்ச்சி, புதுமைகளில் இந்தியா- ஐக்கிய ஐரோப்பாவின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக நீண்டகால கேந்திர அணுகுமுறையைப் பின்பற்ற அறிவியல், தொழில்நுட்பம் குறித்த இந்திய- ஐக்கிய ஐரோப்பிய கூட்டுக் குழு பரஸ்பர ஒப்புதல் அளித்துள்ளது.

அறிவியல், தொழில்நுட்பம் புதுமைகள் துறையில் இந்தியாவும் ஐக்கிய ஐரோப்பாவும் இணைந்து மேற்கொண்ட சாதனைகளை இரு தரப்பினரும் பாராட்டியதுடன், ஐரோப்பிய ஆணையத்தின் ஆராய்ச்சி, புதுமைகளுக்கான தலைமை இயக்குநர் திரு ஜான் எரிக் பாக்கே, இந்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறையின் செயலாளர் பேராசிரியர் அசுதோஷ் ஷர்மா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட காலகட்டத்திற்குள் திட்டம் சார்ந்த பணிகளை உருவாக்கி செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

கூட்டு அறிக்கையின் அடிப்படையிலும், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற உச்சிமாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 'ஐக்கிய ஐரோப்பிய- இந்திய கேந்திர கூட்டணி: 2025 ஆம் ஆண்டுக்கான திட்ட வரைபடத்தைக்’ கருத்தில் கொண்டும், சைபர் இயற்பியல் முறைகள், செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், சுழற்சி பொருளாதாரம், மின்சார இயக்கம், வளங்களின் முறையான பயன்பாடு, நிலையான வேளாண் உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் இருதரப்பும் ஒத்துழைப்பு வழங்க விருப்பம் தெரிவித்துள்ளன.

தூய்மையான எரிசக்தி பயன்பாட்டிற்கு ஆராய்ச்சி, புதுமைகளில் கவனம் செலுத்தும் புதுமைகள் இயக்கத்தின் முக்கிய பங்கு குறித்தும், கொவிட்- 19 பெருந்தொற்றைத் தாண்டிய சுகாதார துறைகளில் இருதரப்பும் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாகவும் வலியுறுத்தப்பட்டது.

 துருவ அறிவியலில் ஒத்துழைப்பு பற்றியும் இருதரப்பும் காணொலி வாயிலாக விவாதித்தன.மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1699880




(Release ID: 1699968) Visitor Counter : 220