பாதுகாப்பு அமைச்சகம்

இந்திய-சீன ராணுவ படைப்பிரிவு கமாண்டர்கள் அளவிலான பத்தாவது ஆலோசனைக் கூட்டம் குறித்த கூட்டு செய்திக் குறிப்பு

Posted On: 21 FEB 2021 6:45PM by PIB Chennai

பிப்ரவரி 20 அன்று, மோல்டோ/சுஷுல் எல்லையோர சந்திப்பு மையத்தின் சீன பகுதியில் இந்திய-சீன ராணுவ படைப்பிரிவுகளின் கமாண்டர்கள் அளவிலான பத்தாவது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பங்காங் ஏரி பகுதியிலிருந்து படைகளை திரும்பப் பெற்றது குறித்து நேர்மறையான மதிப்பீடுகளை இரு தரப்பும் வழங்கியதோடு, மேற்கு பிரிவின் எல்லைப் பகுதியில் நிலவும் இதர பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வு காண்பதற்கான முக்கிய நடவடிக்கையாக இது அமைந்ததாகவும் தெரிவித்தன.

மேற்கு பிரிவின் எல்லைப் பகுதியில் நிகழும் இதர பிரச்சனைகள் குறித்த ஆழமான கருத்து பரிமாற்றங்களை இரு தரப்பும் மேற்கொண்டன.

இரு நாட்டு தலைவர்களுக்கிடையேயான புரிதலை பின்பற்றுவதோடு, இரு தரப்பின் தகவல் பரிமாற்றம் மற்றும் பேச்சுவார்த்தையை தொடர்வது என்றும், கள நிலவரத்தை கட்டுக்குள் கொண்டு வரவும், எல்லைப்பகுதிகளில் அமைதி மற்றும் சுயகட்டுப்பாட்டை இணைந்து பராமரிப்பதற்காக மீதமுள்ள பிரச்சினைகளில் பரஸ்பர ஒத்துழைப்போடு கூடிய தீர்வுகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1699803


(Release ID: 1699819) Visitor Counter : 284


Read this release in: English , Urdu , Hindi , Marathi