கலாசாரத்துறை அமைச்சகம்

2வது கட்ட தேசிய கலாச்சார விழா டார்ஜிலிங்கில் நாளை தொடக்கம்

Posted On: 21 FEB 2021 3:58PM by PIB Chennai

இரண்டாவது கட்ட தேசிய கலாச்சார விழா டார்ஜிலிங்கில் நாளை முதல் 24 ஆம் தேதி வரை நடக்கிறது. இதை ராஜ்பவனில் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை இணை அமைச்சர் திரு.பிரகலாத் சிங் படேல் தொடங்கி வைக்கிறார்.

இதன் நிறைவு விழாவில் மேற்கு வங்க ஆளுநர் திரு.ஜகதீப் தங்கர் பங்கேற்கிறார்.

ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வை ஊக்குவிப்பதற்காக இந்த தேசிய கலாச்சாரா விழா நடத்தப்படுகிறது.

 இந்த 3 நாள் நிகழ்ச்சி, டோனா கங்குலியின் ஒடிசி நடன நிகழ்ச்சி மற்றும் பிரபல இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளுடன் நாளை தொடங்குகிறது.

2 ஆம் நாள் மற்றும் 3 ஆம் நாள் நிகழ்ச்சிகளில் உள்ளூர் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைப்பெறுகின்றன.

இந்த கலாச்சார நிகழ்ச்சியில் 20 அங்காடிகள் அமைக்கப்படுகின்றன. இதில் நாடு முழுவதும் உள்ள கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த தேசிய கலாச்சார நிகழ்ச்சியை, மத்திய கலாச்சாரத்துறை 2015 ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது.

இதில் 7 மண்டல கலாச்சார மையங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இதன் மூலம் நாட்டின் பாரம்பரிய கலாச்சார நிகழ்ச்சிகள் வெளிக் காட்டப்படுகின்றன.

அதே நேரத்தில் கலைஞர்கள் மற்றும் கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்துக்கும் இது ஆதரவு அளிக்கிறது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1699766(Release ID: 1699790) Visitor Counter : 12