சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
‘மக்கள்தொகைக்கு எதிரான கோள்’: மாநாட்டைத் தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன்
Posted On:
20 FEB 2021 6:21PM by PIB Chennai
வியான் மற்றும் ஜீ ஊடகத்தின் நீடிப்புத்திறன் இயக்கம்: மக்கள்தொகைக்கு எதிரான கோள் என்ற ஓராண்டு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற ‘மக்கள்தொகைக்கு எதிரான கோள்’ என்ற தலைப்பிலான மாநாட்டில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று கலந்து கொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு வளங்களின் தேவையும் அதிகரிக்கும், மக்கள் தொகை பெருகிவரும் நிலையில், பூமியின் வளங்கள் குறைகின்றன. மக்கள் தொகை பெருக்கம் இந்த கிரகத்தையும், மனித சமூகத்தையும் பல்வேறு வழிகளில் பெரிதும் பாதிக்கின்றது. சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் ஏற்படும் தாக்கத்தை இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் வசிக்கும் மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்”, என்று கூறினார்.
குடும்ப கட்டுப்பாடை ஊக்கப்படுத்துவதற்காக இந்தியா மேற்கொண்டு வரும் விரிவான நடவடிக்கைகள் குறித்து பேசிய அவர், தேசிய குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை உலகளவில் முதல் நாடாக இந்தியா கடந்த 1952-ஆம் ஆண்டு கொண்டு வந்ததை நினைவுகூர்ந்தார். “கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்ட இந்தியா மற்றும் மாநிலங்களுக்கான மக்கள் தொகை மதிப்பீடுகள் 2011-2036-ன்படி 2011-15ல் 2.37 ஆக இருந்த மொத்த கருத்தரிப்பு வீதம் 2031-35ல் 1.73 ஆகக் குறையும்”, என்று அவர் தெரிவித்தார்.
தற்சார்பு இந்தியா, அதிகாரம் வழங்கப்பட்ட இளைஞர்களின் வலுவான தோள்களின் மீது இயங்கும் என்றும், தேசிய கல்வி கொள்கை, அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதுமை கொள்கை, ஸ்டார்ட் அப் இந்தியா, ஃபிட் இந்தியா போன்ற திட்டங்களும், கொள்கைகளும் உலகின் குருவாக இந்தியா உயர்வதற்கு ஏதுவாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=169968
(Release ID: 1699694)
Visitor Counter : 257