தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
12.54 லட்சம் புதிய உறுப்பினர்கள் பணியாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் டிசம்பரில் இணைந்தனர், தமிழகம் முன்னிலை
Posted On:
20 FEB 2021 5:22PM by PIB Chennai
இன்று (2021 பிப்ரவரி 20) வெளியிடப்பட்ட பணியாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் தரவுகளின் படி, 2020 டிசம்பர் மாதம் சுமார் 12.54 லட்சம் புதிய சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர்.
கொவிட்-19 பெருந்தொற்றுக்கு இடையிலும், 53.70 லட்சம் நிகர உறுப்பினர்களை இந்த நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் பணியாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் இணைத்துள்ளது.
இரண்டாம் காலாண்டை விட மூன்றாம் காலாண்டில் 22 சதவீதம் வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.
2020 டிசம்பர் மாதத்தில் சுமார் 8.04 லட்சம் புதிய உறுப்பினர்கள் பணியாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் இணைந்துள்ளனர். பணியாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் இருந்து வெளியேறிய சுமார் 4.5 லட்சம் பழைய உறுப்பினர்கள் மீண்டும் இணைந்துள்ளனர்.
பணியாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் இணைந்துள்ள நிறுவனங்களுக்கிடையே உறுப்பினர்கள் பணி மாறுவதும், தங்களது பணியாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குகளை தொடர விரும்புவதும் இதன் மூலம் தெரிகிறது.
வெளியேறிய உறுப்பினர்கள் மீண்டும் இணைவதன் மூலம், நாட்டில் கொவிட்-19 பாதிப்புகள் குறைந்து வருவதை தொடர்ந்து, பணியாளர்கள் வேலைகளுக்கு திரும்புவதும் புலனாகிறது.
பணியாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன மொத்த உறுப்பினர் சேர்க்கையில் மகாராஷ்டிரா, ஹரியானா, குஜராத், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் பெரும்பாலானோர் இணைந்துள்ளனர்.
இந்த வருடம் இணைந்துள்ள 53.70 லட்சம் பேரில் 29.12 லட்சம் உறுப்பினர்கள் மேற்கண்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1699667
(Release ID: 1699683)
Visitor Counter : 153