நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

தேசிய உணவு பாதுகாப்புச் சட்ட செயல்பாடுகள்: மத்திய உணவு செயலாளர், குஜராத் மாநில அரசுடன் ஆய்வு

Posted On: 20 FEB 2021 3:55PM by PIB Chennai

உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் செயலாளர்  (உணவு) திரு. சுதான்சு பாண்டே, குஜராத் மாநில அரசுடன், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் அது சம்பந்தமான விஷயங்கள் குறித்து காந்திநகரில் ஆய்வு நடத்தினார்.

குஜராத்தில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அண்மையில் 30 லட்சம் பயனாளிகள் இணைக்கப்பட்டதாகவும், தேசிய சமூக உதவித் திட்டம் போன்ற இதர மத்திய அரசு திட்டங்களுடன் இணைந்து கூடுதல் பயனாளிகளை கண்டறிவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மாநில அரசின் அதிகாரிகள் கூட்டத்தின்போது தெரிவித்தனர்.

நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் செல்லாமல், உணவு தானியங்களை மானிய விலையில் பயனாளிகளுக்கு கிடைக்க வழி செய்யும் தானியங்கி  தானியம் வினியோகிக்கும் இயந்திரங்கள் சோதனை முயற்சியில் 5 நகரங்களில் செயல்படுத்தப்படுவதாக செயலாளர் தெரிவித்தார்.

 

இந்த இயந்திரத்தை அகமதாபாத்தில் சோதனை முயற்சியில் பயன்படுத்த குஜராத் மாநில அரசு விருப்பம் தெரிவித்தது.

குஜராத் மாநிலத்தில் மக்காச்சோளத்தின் உற்பத்தி 3 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக இருப்பதாலும், அந்த மாநிலத்தில் பெட்ரோலியப் பொருட்களின் பயன்பாடு உயர்ந்திருப்பதாலும், எத்தனால் தயாரிப்பில் மக்காச்சோளத்தை முக்கிய கச்சா பொருளாகப் பயன்படுத்தலாம் என்று திரு. சுதான்சு பாண்டே ஆலோசனை தெரிவித்தார்.

சேமிப்புக் கிடங்குகளை நவீனமயமாக்கும் இந்திய அரசின் திட்டங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. சேமிப்பு உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு உபரி நிலங்களை வழங்குவது தொடர்பாக மாநில அரசுகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று திரு. சுதான்சு பாண்டே வலியுறுத்தினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1699631


(Release ID: 1699670) Visitor Counter : 156