தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

2021 ஜனவரி மாதத்திற்கான, வேளாண் மற்றும் ஊரக தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் வெளியீடு

Posted On: 19 FEB 2021 5:00PM by PIB Chennai

வேளாண் மற்றும் ஊரக தொழிலாளர்களுக்கான, 2021 ஜனவரி மாதத்திற்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டெண் (அடிப்படை:1986-87=100), 9 மற்றும் 8 புள்ளிகள் குறைந்து முறையே 1038 மற்றும் 1045 புள்ளிகளாக உள்ளது.

இந்தக் குறியீட்டெண்ணின் ஏற்ற இறக்கங்கள், மாநிலங்கள் தோறும் மாறுபடுகின்றன. தமிழ்நாடு, வேளாண் தொழிலாளர்களுக்கான குறியீட்டெண்ணில் 1250 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இமாச்சலப் பிரதேசம் 819 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளன.

கிராமப்புற தொழிலாளர்களைப் பொறுத்தவரை, தமிழ்நாடு 1234 புள்ளிகளுடன் குறியீட்டெண் பட்டியலில் முதலிடத்திலும், பிகார் 850 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளன.

சமீபத்திய குறியீடுகள் குறித்து பேசிய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. சந்தோஷ் கங்க்வார், “வேளாண் மற்றும் ஊரக தொழிலாளர்களுக்கான, 2021 ஜனவரி மாதத்திய அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டெண் குறைந்துள்ள உணவு பணவீக்கத்தின் காரணமாக 2.17 சதவீதம் மற்றும் 2.35 சதவீதம் குறைந்துள்ளது என்று கூறினார்.

தானியங்கள், வெங்காயம், காலிஃப்ளவர் மற்றும் கத்திரிக்காய் ஆகியவற்றின் விலைகள் குறைந்ததே இதற்கு காரணம்,” என்றார் அவர்.

வேளாண் மற்றும் ஊரக தொழிலாளர்களுக்கான, 2021 ஜனவரி மாதத்திய அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டை வெளியிட்ட தொழிலாளர் அலுவலகத்தின் தலைமை இயக்குநர் திரு. டி பி எஸ் நெகி, “பணவீக்கம் குறைந்துள்ளது பல லட்சக்கணக்கான கிராமப்புற தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்,” என்று கூறினார்

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1699413

 

------



(Release ID: 1699489) Visitor Counter : 136


Read this release in: English , Urdu , Hindi , Marathi