சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

சுகாதார நெருக்கடிகளுக்கு, பகிரப்பட்ட நடவடிக்கை தேவை என்பதை கொரோனா கற்றுக் கொடுத்துள்ளது: கொவிட்-19 மேலாண்மை பயிலரங்கில் டாக்டர் ஹர்ஷ் வர்தன் உரை

Posted On: 18 FEB 2021 5:34PM by PIB Chennai

சுகாதார நெருக்கடிகளுக்கு, பகிரப்பட்ட நடவடிக்கை தேவை என்பதை  கொரோனா கற்றுக் கொடுத்துள்ளது என   கொவிட்-19 மேலாண்மை பயிலரங்கில் டாக்டர் ஹர்ஷ் வர்தன் பேசினார்.

கொவிட்-19 தொற்றை எதிர்கொள்வதில் நல்ல நடைமுறைகளை பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் முன்னோக்கி செல்லும் வழி’  குறித்த பயிலரங்கில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், மாலத்தீவு, மொரீசியஸ் உட்பட 9 அண்டை நாடுகள் கலந்து கொண்டன.

இதில் பிரதமர் திரு. நரேந்திர மோடி துவக்க வுரை நிகழ்த்தினார். நிறைவு நாள் நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஆற்றிய உரை:

கொவிட் -19 மேலாண்மை குறித்த இந்த பயிலரங்கில் நீங்கள் உற்சாகமாக பங்கேற்றதற்கு நன்றி. கொவிட்-19 எதிர்கொள்வதில் உங்களின் அனுபவங்கள், நல்ல நடைமுறைகள் மற்றும் முன்னோக்கி செல்லும் வழியை நீங்கள் பகிர்ந்து கொண்டீர்கள்.

சுகாதாரத்தை வலுப்படுத்துவதை அலட்சியப்படுத்தினால் ஏற்படும் விளைவுகளை, மக்களுக்கு இந்த கொவிட்-19 அறியச் செய்தது மற்றும் சுகாதார தயார் நிலை குறித்து நாம் விவாதித்தோம்.

உலகளாவிய நெருக்கடி சமயத்தில் பின்பற்ற வேண்டிய இடர் மேலாண்மை, உலகளவிலான கூட்டு பங்களிப்பை வலுப்படுத்துதல், பொது சுகாதாரத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பதை இந்த கொவிட் 19 நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது.

அதனால்தான் நாம் அனைவரும் இன்று உலகளாவிய ஒற்றுமையைப் பற்றி விவாதிக்கிறோம்.

ஒட்டு மொத்த அரசு, ஒட்டு மொத்த சமூகத்துடன் கூடிய அணுகுமுறைதான் இந்தியாவின் பலம்.

 

 அரசு விதித்த கட்டுப்பாடு வழிகாட்டுதல்களை பின்பற்றுவதில்  135  கோடி  மக்களும் தங்களின் பலத்தை வெளிப்படுத்தினர். தொற்றை கட்டுப்படுத்துவதில், பிரதமர் திரு. நரேந்திர மோடி காட்டிய வழியை, ஒட்டு மொத்த நாடும் இதற்கு முன் இல்லாத வகையில் பின்பற்றியது.

2020 ஆம் ஆண்டை அறிவியல் ஆண்டு என நான் அழைக்கிறேன். அறிவியல் நிபுணர்கள் தங்கள் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ளும் வகையில் உலகளாவிய கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

உலகம் ஒரு குடும்பம் என்ற பழங்கால கொள்கை அடிப்படையில்தான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை உள்ளது. அதனால்தான் தடுப்பூசி நட்பு என்ற எங்களின் தனிச்சிறப்பான முயற்சி தொடங்கப்பட்டது

அனைத்து சுகாதார நெருக்கடிகளுக்கும், பகிரப்பட்ட நடவடிக்கை தேவை என்பதை இந்த கொரோனா தொற்று நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது. இப்போதைய தேவை, நாடுகளின் கொள்கைகளை மிக சிறந்த அளவில் பகிர்ந்து கொள்வதுதான்.

இவ்வாறு டாக்டர் ஹர்ஷ் வர்தன் பேசினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1699088

**

 




(Release ID: 1699234) Visitor Counter : 201