பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
2014 -இல் 2 லட்சமாக இருந்த பொதுமக்கள் குறை தீர்ப்பு தற்போது 21 லட்சமாக அதிகரித்து, அவற்றில் 95 சதவீதத்திற்கும் அதிகமானவை தீர்த்து வைக்கப்பட்டுள்ளன: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
18 FEB 2021 5:12PM by PIB Chennai
பொதுமக்கள் குறைகளை தீர்ப்பதற்கான தொழில்நுட்ப தளங்கள் பற்றிய தேசிய பயிலரங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நாடு முழுவதும் உள்ள உதவி ஆணையர்கள், மாவட்ட மேம்பாட்டு ஆணையர்கள், மத்திய, மாநில/ யூனியன் பிரதேச அரசுகளின் முதன்மை பொதுமக்கள் குறைதீர்ப்பு அதிகாரிகள் ஆகியோர் இடையே மத்திய வடகிழக்கு மாகாணங்கள் வளர்ச்சிக்கான இணை அமைச்சரும் (தனிப் பொறுப்பு), பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று உரையாற்றினார்.
பொதுமக்கள் குறைகளை தீர்ப்பதற்காக பலதரப்பட்ட தொழில்நுட்பத் தளங்களை மாநிலங்கள் பயன்படுத்தி வருவதாகவும், அவை குறித்து அறிந்து கொண்டு அவற்றை செயல்படுத்துவது மிகவும் அவசியம் என்றும் அப்போது அமைச்சர் வலியுறுத்தினார்.
மாவட்ட அளவுகளில் கூட பல்வேறு சிறப்பான நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக அவர் கூறினார்.
மத்திய, மாநில அரசுகளைத் தவிர, மாவட்டங்களும் பொதுமக்கள் குறைதீர்ப்பில் அதிக ஈடுபாடுடன் செயல்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
மாவட்ட அளவில் செயல்படுத்தப்படும் தொழில்நுட்ப தளங்கள் குறித்து எடுத்துரைப்பதே இந்த தேசிய பயிலரங்கின் நோக்கம் என்று அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். பொதுமக்கள் குறை தீர்ப்பு நடவடிக் கைகள் வாயிலாக குடிமக்களுக்கு அயராது பணியாற்றி வரும் மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் அனைத்து மத்திய, மாநில முதன்மை பொதுமக்கள் குறைதீர்ப்பு அதிகாரிகளை அமைச்சர் பாராட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1699079
-------
(Release ID: 1699231)
Visitor Counter : 161