அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கொவிட் 19 ஆராய்ச்சியில் வாழ்க்கை அறிவியல் மையத்தின் பங்களிப்புக்கு டாக்டர் ஹர்ஷ் வர்தன் பாராட்டு

Posted On: 18 FEB 2021 4:27PM by PIB Chennai

கொவிட் 19 ஆராய்ச்சியில், உயிரி தொழில்நுட்ப துறையின் வாழ்க்கை அறிவியல் மையத்தின் பங்களிப்புக்கு டாக்டர் ஹர்ஷ் வர்தன் பாராட்டு தெரிவித்தார்.

ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரில், உயிரி தொழில்நுட்ப துறையின் வாழ்க்கை அறிவியல் மையம் (DBT-ILS) உள்ளது. இதன் 32வது நிறுவன தினத்தில் மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறை அமைச்சர் டாக்டர் ஷர்ஷ் வர்தன், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இங்கு விலங்குகளுக்கான ஆய்வு தளத்துக்கு டாக்டர் ஹர்ஷ் வர்தன் அடிக்கல் நாட்டினார். இங்கு மருந்து மற்றும் தடுப்பூசி ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன

இங்கு கொவிட்-19 பரிசோதனைக் கூடத்தையும் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் உரையாற்றிய டாக்டர் ஹர்ஷ் வர்தன், ‘‘ கொவிட்-19 சமயத்தில் வாழ்க்கை அறிவியல் மையத்தின் அறிவியல் சாதனைகள் பாரட்டத்தக்கது’’ என்றார்.

அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் பேசுகையில், ‘‘ ஒடிசா மற்றும் கிழக்கு இந்தியாவில் உயிரி தொழில்நுட்ப துறையின், வாழ்க்கை அறிவியல் மையம் முன்னணி நிறுவனமாக உள்ளது. ஒடிசா மக்களுக்கு இந்த மையம் ஆற்றும்பணிகள் திருப்தி அளிக்கிறது.

ஒடிசா கடலோர பகுதியில், பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிப்பதில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கவனம் செலுத்துகிறார்’’ என்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1699058

-----


(Release ID: 1699226) Visitor Counter : 137


Read this release in: Odia , English , Urdu , Hindi , Punjabi