சுரங்கங்கள் அமைச்சகம்

கனிம உற்பத்தி: 2020 டிசம்பர் மாதம்

Posted On: 18 FEB 2021 2:43PM by PIB Chennai

சுரங்கத் துறையின் சுரங்கத்தில் வெட்டி எடுக்கும் கனிம உற்பத்திக் குறியீடு 2020 டிசம்பர் மாதத்தில் (அடிப்படை: 2011-12 = 100) 115.1 ஆக இருந்தது.

இதனை 2019-ஆம் ஆண்டு டிசம்பர்  மாதத்துடன் ஒப்பிடுகையில் 4.8 சதவீதம் குறைவாகும்ஏப்ரல்டிசம்பர், 2020-21 காலக் கட்டத்தில் இதன் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி (-) 11.3 சதவீதமாகும்.

டிசம்பர், 2020-ல் முக்கிய தாதுக்களின் உற்பத்தி அளவு:

நிலக்கரி 711 இலட்சம் டன், பழுப்பு நிலக்கரி 32 இலட்சம் டன்இயற்கை எரிவாயு (பயன்படுத்தப்பட்டது) 2355 மில்லியன் கியூ. மீ., பெட்ரோலியம் (கச்சா) 26 இலட்சம் டன், பாக்சைட் 1963 ஆயிரம் டன், குரோமைட் 236 ஆயிரம் டன், வீரியமிக்க செம்பு 7 ஆயிரம் டன், தங்கம் 61 கிலோ, இரும்புத் தாது 209 லட்சம் டன், வீரியமிக்க ஈயம் 34 ஆயிரம் டன், மாங்கனீசு தாது 275 ஆயிரம் டன், வீரியமிக்க துத்தநாகம் 131 ஆயிரம் டன், சுண்ணாம்பு 333 லட்சம் டன், பாஸ்போரைட் 133 ஆயிரம் டன், மேக்னசைட் 6 ஆயிரம் டன், வைரம் 2901 காரட் ஆகவும் இருந்தன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1699019

------



(Release ID: 1699219) Visitor Counter : 109