ஜல்சக்தி அமைச்சகம்

ஜல்ஜீவன் திட்டம் மூலம் 3.5 கோடி கிராம வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு

Posted On: 17 FEB 2021 1:38PM by PIB Chennai

ஜல்ஜீவன் திட்டம் மூலம் 3.5 கோடி கிராம வீடுகளுக்கு, குடிநீர் குழாய் இணைப்பு  வழங்கப்பட்டுள்ளது.

2024ம் ஆண்டுக்குள்  கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், குடிநீர் குழாய் இணைப்பு வழங்க ஜல் ஜீவன் திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திரமோடி 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி தொடங்கி வைத்தார்.

 தற்போது 3.53 கோடி கிராம வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி நிலவரப்படி, மொத்தம் இருந்த 18.93 கோடி கிராம வீடுகளில், 3.23 கோடி (17 சதவீதம்) வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் குழாய் இணைப்பு இருந்தது.

மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மேற்கொண்ட  அயராத முயற்சிகளால், தற்போது 3.53 கோடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க உதவியுள்ளது.

மேலும் 52 மாவட்டங்கள், 77 ஆயிரம் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு உள்ளதுதற்போது 6.76 கோடி (35.24 சதவீதம்) கிராம வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் கிடைக்கிறது.

100 சதவீதம் குடிநீர் குழாய் இணைப்பு பெற்ற முதல் மாநிலமாக கோவா உள்ளது. இதற்கு அடுத்ததாக தெலங்கானா உள்ளது. சமபங்கு  மற்றும் உள்ளடக்கம் கொள்கைப்படி ஒவ்வொரு வீட்டுக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றன.

தரமான குடிநீர் ஒவ்வொரு வீட்டுக்கும் போதிய அளவில் வழங்க வேண்டும் என்ற நோக்கில் ஜல் ஜீவன் திட்டம் மாநில அரசுகளுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1698636

-----

 



(Release ID: 1698825) Visitor Counter : 405