தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

ஐந்து அகில இந்திய ஆய்வுகளுக்கான கேள்வி பதிலுடன் கூடிய தகவல் கையேட்டையும், மென்பொருள் செயலிகளையும் நாளை வெளியிடுகிறார் மத்திய அமைச்சர் திரு. சந்தோஷ் குமார் கங்வார்

Posted On: 17 FEB 2021 2:33PM by PIB Chennai

 மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு இணை அமைச்சர் (தனி பொறுப்பு) திரு. சந்தோஷ் குமார் கங்வார் சண்டிகரில் உள்ள தொழிலாளர் வாரியம் சார்பாக நடைபெறும் ஐந்து அகில இந்திய ஆய்வுகளுக்கான கேள்வி பதிலுடன் கூடிய தகவல் கையேட்டையும், மென்பொருள் செயலிகளையும் நாளை வெளியிடுவார்.

தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு. அபூர்வ சந்திரா, தொழிலாளர், வேலைவாய்ப்பு மூத்த ஆலோசகரும், தொழிலாளர் வாரியத்தின் தலைமை இயக்குநருமான திரு. டிபிஎஸ் நெகி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.

தொழிலாளர் வாரியத்தால் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள்:

•        புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய அகில இந்திய ஆய்வு

•        வீட்டு தொழிலாளர்கள் பற்றிய அகில இந்திய ஆய்வு

•        தொழில்முறையாளர்களால் உருவாக்கப்படும் வேலை வாய்ப்புகள் பற்றிய அகில இந்திய ஆய்வு

•        போக்குவரத்துத் துறையில் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள் பற்றிய அகில இந்திய ஆய்வு

•        காலாண்டு நிறுவன அடிப்படையிலான அகில இந்திய வேலைவாய்ப்பு ஆய்வு,

தரவு சேகரிப்பு முதல் அறிக்கைகளைத் தயாரிப்பது வரை அனைத்து பணிகளிலும் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன.

6 மாதகால கள ஆய்வு உட்பட 7-8  மாதங்களில் இந்த ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1698656

-----


(Release ID: 1698799) Visitor Counter : 152