சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

88.5 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு நாடு முழுவதும் கொவிட் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது, தமிழகத்தில் மட்டும் 2,79,736 டோஸ்கள்

Posted On: 16 FEB 2021 7:59PM by PIB Chennai

நாட்டில் கொவிட்-19 தடுப்பு மருந்து பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 88.5 லட்சத்தை தாண்டி உள்ளது.

நாடு தழுவிய மிகப்பெரிய கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கல் திட்டத்தின் 32-வது நாளான இன்று வரை 1,90,665 அமர்வுகளில் 88,57,341 சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதில் முதல் கட்டத்தில் தடுப்புமருந்து எடுத்துக்கொண்ட 61,29,745 சுகாதார பணியாளர்கள், இரண்டாவது கட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 2,16,339 சுகாதார பணியாளர்கள் மற்றும் முதல் முறை தடுப்பு மருந்து பெற்றுக்கொண்ட 25,11,257 முன்கள பணியாளர்கள் அடங்குவர்.

முதல் கட்டத்தில் தடுப்பு மருந்து பெற்று 28 நாட்கள் நிறைவு செய்தவர்களுக்கு இந்த கட்டத்தில் தடுப்பூசி போடப்படுகிறது.

தமிழ்நாட்டை பொருத்தவரை, முதல் கட்டத்தில் 2,72,684 பேர்களுக்கும், இரண்டாவது கட்டத்தில் 7,052 நபர்களுக்கும் என ஆக மொத்தம் 2,79,736 மருந்துகள் (டோஸ்) வழங்கப்பட்டுள்ளன.

உலகின் மிகப்பெரிய தடுப்புமருந்து வழங்கல் நடவடிக்கைகளில் ஒன்றான இந்தியாவின் கொவிட் தடுப்பூசி விநியோக செயல்முறை, 2021 ஜனவரி 16 அன்று பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1698525

                                                                                                  -------(Release ID: 1698540) Visitor Counter : 191