உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்

அசாமில் உள்ள உணவு பதப்படுத்துதல் தொழில்களின் பங்குதாரர் கூட்டத்தில் திரு ராமேஸ்வர் தேலி கலந்து கொண்டார்

Posted On: 16 FEB 2021 4:43PM by PIB Chennai

அசாம் அரசுடன் இணைந்து மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகம் கவுகாத்தியில் ஏற்பாடு செய்த உணவு பதப்படுத்துதல் தொழில்களின் பங்குதாரர் கூட்டத்தில், இந்த அமைச்சகத்தின் இணை அமைச்சர் திரு ராமேஸ்வர் தேலி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், இந்திய அரசின் கொள்கையின் படியும், இத்துறையின் முன்னுரிமைகளைச் சார்ந்தும், தன்னுடைய பட்ஜெட்டில் 10 சதவீதத்தை வடகிழக்குப் பிராந்தியத்தில் உள்ள உணவு பதப்படுத்துதல் துறையின் வளர்ச்சித் திட்டங்களுக்கு உணவு பதப்படுத்துதல் அமைச்சகம் ஒதுக்கி வருவதாகக் கூறினார்.

ரூ 200 கோடி திட்ட மதிப்பில் 15 உணவு பதப்படுத்துதல் நிறுவனங்கள் அசாமில் தற்போது இயங்கி வருவதாக அமைச்சர் கூறினார். ரூ 60 கோடி மதிப்பிலான வேளாண் பதப்படுத்துதல் திட்டங்களுக்கு அசாமில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், இதே அளவுள்ள மற்றொரு திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்படவுள்ளதாகக் கூறினார்.

அசாமின் நல்பாரி மாவட்டத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய உணவு பூங்காவால் அப்பகுதியில் பொருளாதாரமும், வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

 

**********



(Release ID: 1698493) Visitor Counter : 117