சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

இந்திய சைகை மொழி அகராதியின் 3ம் பதிப்பு: மத்திய அமைச்சர் திரு தவார்சந்த் கெலாட் வெளியீடு

Posted On: 16 FEB 2021 3:21PM by PIB Chennai

இந்திய சைகை மொழி அகராதியின் 3ம் பதிப்பை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு தவார்சந்த் கெலாட் காணொலி மூலம் நாளை, 2021 பிப்ரவரி 17ம் தேதி வெளியிடுகிறார்இதில் ஏற்கனவே உள்ள 6,000 விதிமுறைகளுடன், 10,000 விதிமுறைகள் உள்ளனசமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர்கள் திரு கிரிஷன் பால் குர்ஜார், திரு ராமதாஸ் அதவாலே, திரு ரத்தன் லால் கட்டாரியா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்இந்நிகழ்ச்சி கீழ்கண்ட இணைப்பில் நேரடியாக ஒளிபரப்பப்படும். https://webcast.gov.in/msje/

இந்த அகராதியை, இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (Indian Sign Language Research and Training Centre (ISLRTC) கொண்டு வந்துள்ளது.   இது சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரம் அளித்தல் துறையின் தன்னாட்சி அமைப்பு.  

இந்திய சைகை மொழி அகராதியின் 3ம் பதிப்பில், அன்றாட பயன்பாட்டில் உள்ள முறைகள், கல்வி, சட்டம், நிர்வாகம், மருத்துவம், வேளாண் துறை தொடர்புடைய 10,000 விதிமுறைகள்  உள்ளனநாட்டின் பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தப்படும் பிராந்திய சைகைகளும் இந்த அகராதியில் உள்ளன.

************


(Release ID: 1698489) Visitor Counter : 169