பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

இந்திய பழங்குடியினர் ‘ஆதி மகோத்சவம்’ வெற்றிகரமாக நிறைவு

प्रविष्टि तिथि: 16 FEB 2021 12:55PM by PIB Chennai

புதுதில்லியில் கடந்த இரண்டு வாரங்களாக நடந்த பழங்குடியின கைவினை கலைஞர்கள் பங்கேற்றஆதி மகோத்சவம்விழா நேற்று நிறைவடைந்தது.

புதுதில்லி ஐஎன்ஏ மார்க்கெட் திறந்த வெளிசந்தையில், ‘ஆதி மகோத்சவம்விழா கடந்த 1 ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடந்தது. நிறைவு விழாவுக்கு இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவு சந்தை மேம்பாட்டு அமைப்பின்(TRIFED) தலைவர் திரு ரமேஷ் சந்த் மீனா தலைமை வகித்தார்.

ஆதி மகோத்சவம் விழாவில் பழங்குடியினரின் ஜவுளி, பரிசுப் பொருட்கள், இயற்கை விவசாயப் பொருட்கள், பிரம்பு மற்றும் மூங்கில் பொருட்கள், அணிகலன்கள், வரைபடங்கள், பானைகள், உணவுப் பொருட்கள் ஆகியவை இடம் பெற்றன. ஆதி மகோத்சவத்தில் சிறப்பாக செயல்பட்ட 3 பழங்குடியின கைவினைக் கலைஞர்கள், நிறைவு விழாவில் பாராட்டப்பட்டனர். இதில் பங்கேற்ற கைவினைக் கலைஞர்களுக்கும், அமைப்புகளுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

கடந்த இரண்டு வாரங்களாக நடந்த தேசிய பழங்குடியினர் திருவிழாவில்நாடு முழுவதிலுமிருந்து 25 மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பழங்குடியின கைவினைக் கலைஞர்கள், சமையல் நிபுணர்கள், கலைஞர்கள், கலை நிகழ்ச்சி குழுவினர் பங்கேற்றனர். இந்த விழாவில் 200 அரங்குகள் அமைக்கப்பட்டு அரிய வகை கைவினைப் பொருட்கள், கைத்தறி ஆடைகள், இயற்கை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.

இங்கு கடந்த இரண்டு வாரத்தில் ரூ.4 கோடிக்கு பொருட்கள் விற்பனையாயின. மேலும், ரூ.8 கோடி அளவுக்கு கொள்முதல் ஆர்டர்களை டிரைஃபெட் கொடுத்ததுஇதன் மூலம் ஆதி மகோத்சவம் விழாவில் மொத்தம் ரூ.12 கோடிக்கு வர்த்தகப் பரிவர்த்தனை நடந்தது. பழங்குடியினர் வாழ்க்கை, கைவினைப் பொருட்கள், கலாச்சாரம் மற்றும் உணவு ஆகியவற்றின் திருவிழாவாக ஆதி மகோத்சவம் நிகழ்ச்சி இருந்தது

************


(रिलीज़ आईडी: 1698407) आगंतुक पटल : 192
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi