ரெயில்வே அமைச்சகம்

இந்திய சரக்கு ரயில் போக்குவரத்துக் கழகத்தின் பணிகளை மத்திய அமைச்சர் திரு. பியூஷ் கோயல் ஆய்வு : சரக்கு ரயில் போக்குவரத்தின் மூலதன செலவு கடந்த ஆண்டை விட 21 சதவீதம் உயர்வு

Posted On: 15 FEB 2021 5:48PM by PIB Chennai

மத்திய ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் திரு.பியூஷ் கோயல், இந்திய சரக்கு ரயில் போக்குவரத்துக் கழகத்தின் பணிகளை இன்று ஆய்வு செய்தார்.

இந்தக் கூட்டத்தில் ரயில்வே வாரியத்தின் உயர் அதிகாரிகள், இந்திய சரக்கு ரயில் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தின் போது திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து உயர் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

சரக்கு ரயில் போக்குவரத்தின் மூலதன செலவு, கடந்த ஆண்டை விட 21 சதவீதம் அதிகரித்துள்ளது. 2020-2021 நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் ரூ. 8,201 கோடி மூலதன செலவாக பதிவானது. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தின் மூலதன செலவான ரூ. 6,783 கோடியைவிட கூடுதலாகும்.

கொவிட்-19 பெருந்தொற்றினால் ஏற்பட்ட  பொது ஊரடங்கு காலத்திலும் இந்த அளவு எட்டப்பட்டது.

மேற்கு சரக்கு ரயில் போக்குவரத்து (1504 வழித்தட கி.மீ), கிழக்கு சரக்கு ரயில் போக்குவரத்தில் (1856 வழித்தட கி.மீ) மேற்கொள்ளப்படும்  அனைத்து பணிகளையும் விரைந்து மேற்கொள்ளுமாறு இந்திய சரக்கு ரயில் போக்குவரத்துக் கழகத்திற்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

தனிப்பட்ட பிரிவின் திட்டப்பணிகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டதுடன், இடர்பாடுகள் இல்லாமல் அனைத்து பணிகளையும் சுமுகமாக மேற்கொள்ளவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சரக்கு ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்கான பிரத்தியேக சரக்கு போக்குவரத்து வழித்தடங்களை இந்திய ரயில்வே உருவாக்கி வருகிறது.

2020-21 ஆம் ஆண்டில் 657 கி.மீ வழித்தடம் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டதுடன், 1000-க்கும் அதிகமான ரயில்கள் இயங்கி வருகின்றன.

இந்திய பொருளாதார வளர்ச்சியின் மாற்று சக்தியாக பிரத்தியேக சரக்கு போக்குவரத்து முனையம் அமைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1698180

----


(Release ID: 1698219) Visitor Counter : 179


Read this release in: English , Urdu , Hindi , Manipuri