ரெயில்வே அமைச்சகம்

கொவிட்டுக்கு பிந்தைய காலத்தில் முதன்முறையாக இந்திய ரயில்வேயின் சரக்கு கையாள்வதின் வருமானம் கடந்த ஆண்டைவிட உயர்வு

Posted On: 13 FEB 2021 7:29PM by PIB Chennai

கொவிட்டுக்கு பிந்தைய காலத்தில் முதன்முறையாக இந்திய ரயில்வேயின் சரக்கு கையாள்வதின் வருமானம் கடந்த நிதி ஆண்டு 20-21-இன் ரூ. 97342.14 விட கூடுதலாக ரூ. 98068.45 ஆக அதிகரித்துள்ளது.

பிப்ரவரி மாதத்தின் முதல் 12 நாட்களில் கடந்த ஆண்டு சரக்கு கையாள்வதின் வருமானத்தை விட இந்த வருடம் 5 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதேபோல் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை விட இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரயில்வேயில் சரக்கு கையாள்வதின் வருமானம் ரூ.  206 கோடியாக அதிகரித்துள்ளது.

மதிப்பீடுகளின்படி பிப்ரவரி மாதத்தின் முதல் 12 நாட்களில் சரக்கு கையாள்வதில் வருமானம் ரூ. 4571 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ. 4365 கோடியாக இருந்தது. இதேபோல் சரக்கு கையாள்வதின் அளவும் கடந்த ஆண்டை விட இந்த வருடம் சுமார் 8 சதவீதம் உயர்ந்துள்ளது.

வர்த்தக மேம்பாடு, சலுகைகள், விரைவு தன்மை போன்றவற்றை மேம்படுத்துவதற்காக ரயில்வே துறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் புதிய முன்முயற்சிகளின் பலனாக இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளின் எதிரொலியாகவும், சரக்கு கையாள்வதை மேம்படுத்தி வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்காக ரயில்வேயின் புதிய மேலாண்மை முன்முயற்சிகளின் பிரதிபலிப்பாகவும் இந்த வருமான உயர்வு அமைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1697789

 

-------



(Release ID: 1697807) Visitor Counter : 162


Read this release in: English , Urdu , Hindi , Marathi