அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அறிவியல் துறையில் சர்வதேச மகளிர் மற்றும் இளம் பெண்கள் தினம் 2021-க்கான சிறந்த பெண்கள் விருதுகள் அறிவிப்பு
Posted On:
13 FEB 2021 11:11AM by PIB Chennai
அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக தேசிய அறிவியல் கல்வி நிலையங்களில் உதவித்தொகை பெற்றுள்ள 4 பெண்களுக்கு, அறிவியல் துறையில் சர்வதேச மகளிர் மற்றும் இளம் பெண்கள் தினம் 2021-க்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் (செர்ப்), இந்த துறைகளில் அடிப்படை ஆராய்ச்சிகளுக்கு ஆதரவு வழங்குவதற்காக இந்த விருதினை கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் வழங்குகிறது. ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட தேசிய கல்வி மையங்களில் அங்கீகாரம் பெற்றுள்ள 40 வயதிற்குட்பட்ட பெண் விஞ்ஞானிகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
மும்பை இந்திய தொழில்நுட்ப கழகத்தின் உதவி பேராசிரியரான டாக்டர் ஷோபனா கபூர், மும்பை இனப்பெருக்க ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தின் விஞ்ஞானி டாக்டர் அந்தரா பானர்ஜி, ஹைதராபாத் கால்நடை உயிரி தொழில்நுட்ப தேசிய மையத்தின் விஞ்ஞானி டாக்டர் சோனு காந்தி மற்றும் ஜோத்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் உதவிப் பேராசிரியர் டாக்டர் ரித்து குப்தா ஆகியோருக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மிகப்பெரிய ஒளியியல் சுடரொளி வீச்சு கண்டுபிடிப்பு:
பி எல் லாசெர்டே என்று அழைக்கப்படும் மிகப்பெரிய சூப்பர் கருந்துளையில் சக்திவாய்ந்த சுடரொளி வீச்சுகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் தன்னாட்சி நிறுவனமான ஆர்யபட்டா அவதானிப்பு அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தை (ஏரீஸ்) சேர்ந்த டாக்டர் அலோக் சந்திர குப்தா தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2020 அக்டோபர் மாதம் முதல் இந்த மாபெரும் கருந்துளையை ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
நைனிடாலில் உள்ள சம்பூர்னானந்த் தொலைநோக்கி மற்றும் ஒளியியல் தொலைநோக்கியின் உதவியோடு ஜனவரி 16-ஆம் தேதி இந்த சுடரொளி வீச்சுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
கோரக்பூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இடையே புதிய நம்பிக்கை:
கோரக்பூரில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நீர் சூழலால் பெரிதும் பாதிக்கப்பட்ட 64 வயதான திருமதி கோகிலா தேவிக்கு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தாரா திட்டத்தின் கீழ் உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் சுற்றுச்சூழல் செயல் குழு, வருமானத்திற்கான மாற்று வழியை ஏற்படுத்தியுள்ளது.
தரமான வேளாண் திட்டங்களுக்கான தொழில்நுட்ப ஆதரவை இந்த குழு வழங்குவதன் வாயிலாக ஒரே வருடத்தில் இருபது விதமான பயிர்கள் நடப்பட்டு திருமதி. கோகிலா தேவியின் ஆண்டு வருமானம் 30 சதவீதமாக அதிகரித்துள்ளது.
------
(Release ID: 1697778)
Visitor Counter : 403