கலாசாரத்துறை அமைச்சகம்
ராஷ்டிரிய சன்ஸ்கிரிதி மகோத்சவத்தின் 11-வது பதிப்பு கூச் பெகாரில் நாளை தொடங்குகிறது
Posted On:
13 FEB 2021 3:01PM by PIB Chennai
ராஷ்டிரிய சன்ஸ்கிரிதி மகோத்சவத்தின் 11-வது பதிப்பை மேற்கு வங்கத்தில் உள்ள கூச் பெகார் அரண்மனையில் 2021 பிப்ரவரி 14 அன்று மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. பிரகலாத் சிங் படேல் முன்னிலையில் மேற்கு வங்க ஆளுநர் திரு. ஜக்தீப் தன்கர் துவக்கி வைக்கிறார்.
ஒரு மாநிலத்தின் நாட்டுப்புற மற்றும் பழங்குடியினக் கலைகள், இசை, உணவுகள் மற்றும் கலாச்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு எடுத்துரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ராஷ்டிரிய சன்ஸ்கிரிதி மகோத்சவ், ‘ஒரே இந்தியா, ஒப்பற்ற இந்தியா’ என்னும் லட்சியமிக்க இலக்கை அடைய உதவுவதோடு, கலைஞர்கள் மற்றும் கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவளிப்பதற்கான தளத்தையும் வழங்குகிறது.
2021 பிப்ரவரி 14 முதல் பிப்ரவரி 28 வரை ராஷ்டிரிய சன்ஸ்கிரிதி மகோத்சவத்தின் 11-வது பதிப்பு நடைபெறுகிறது. கூச் பெகாரில் பிப்ரவரி 14 முதல் 16 வரையிலும், டார்ஜிலிங்கில் பிப்ரவரி 22 முதல் 24 வரையிலும், முர்ஷிதாபாத்தில் பிப்ரவரி 27 முதல் 28 வரையிலும் இந்த திருவிழா நடைபெறுகிறது.
மக்களை, குறிப்பாக இளைஞர்களை, அவர்களது பிரத்தியேக கலாச்சாரம், பன்முகத்தன்மை வாய்ந்த இயற்கை, தனிச்சிறப்பு வாய்ந்த விஷயங்கள் மற்றும் வரலாறோடு, இந்திய நாட்டின் சிறப்பியல்புகளை மையக்கருவாகக் கொண்டு, இந்நிகழ்வு இணைக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1697721
***
(Release ID: 1697776)
Visitor Counter : 215