நிதி அமைச்சகம்

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு சீர்திருத்தத்தை மேற்கொண்டதால், பஞ்சாப் மாநிலத்திற்கு கூடுதலாக ரூ.1,516 கோடி கடன் பெற மத்திய அரசு ஒப்புதல்

Posted On: 13 FEB 2021 10:16AM by PIB Chennai

மத்திய நிதியமைச்சகத்தின், செலவினத்துறை அறிமுகப்படுத்திய ஒரு நாடு, ஒரே ரேஷன் கார்டு சீர்திருத்தத்தை வெற்றிகரமாக மேற்கொண்ட 13-வது மாநிலமாக பஞ்சாப் மாறியுள்ளது. இதனால், வெளிச்சந்தையில் ரூ.1,516 கோடி கூடுதல் நிதி ஆதாரம் திரட்ட பஞ்சாப் தகுதி பெற்றுள்ளது.

இதற்கான அனுமதியை மத்திய செலவினத்துறை வழங்கியுள்ளது.

ஆந்திரப் பிரதேசம், கோவா, குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, தமிழ்நாடு, திரிபுரா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய 12 மாநிலங்கள் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு சீர்திருத்தத்தை நிறைவு செய்துள்ளன. தற்போது இந்த மாநிலங்களின் பட்டியலில் பஞ்சாப்பும் இணைந்துள்ளது.

இந்த 13 மாநிலங்கள் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு சீர்திருத்தத்தை நிறைவு செய்துள்ளதை அடுத்து ரூ.34, 956 கோடியை இவை கூடுதல் கடனாகப் பெற மத்திய செலவினத்துறை அனுமதி வழங்கியது

இது வரை, பரிந்துரைத்த நான்கில் ஒரு சீர்திருத்தத்தையாவது 17 மாநிலங்கள் செயல்படுத்தியுள்ளன.

இதில், 13 மாநிலங்கள் ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை சீர்திருத்தத்தையும், 12 மாநிலங்கள் வர்த்தகம் செய்வதை எளிதாக்குதல் சீர்திருத்தங்களையும், 6 மாநிலங்கள் உள்ளாட்சி அமைப்புகள் சீர்திருத்தங்களையும், 2 மாநிலங்கள் மின்சாரத் துறை சீர்திருத்தங்களையும் மேற்கொண்டுள்ளன.

இதன் மூலம், அம்மாநிலங்களுக்கு ரூ. 76,512 கோடி கூடுதல் கடன் பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1697633

 

-----



(Release ID: 1697752) Visitor Counter : 188