பாதுகாப்பு அமைச்சகம்
பத்திரிகை குறிப்பு
प्रविष्टि तिथि:
13 FEB 2021 12:30PM by PIB Chennai
ஹாக்கி போட்டியில் வென்றவர்களுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பரிசு வழங்கினார்
பெங்கால் பொறியாளர் குழு மற்றும் மைய ரூர்க்கி ஆகியவற்றை 2021 பிப்ரவரி 12 அன்று பார்வையிட்ட இந்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு.அஜித் தோவல், தமது தந்தையும், ஹாக்கி வீரரும், பெங்கால் சாப்பர்சில் 36 ஆண்டு காலம் சிறப்பான பங்காற்றியவருமான திரு. மஜ் குணானந்த் தோவலின் நினைவாக ஏற்படுத்தப்பட்ட சுழற்கோப்பையை, வெற்றி பெற்ற அணிக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின்போது பிஈஜி மற்றும் மைய அணி, மற்றும் பெங்கால் சாப்பர்சின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த வீரர்களைக் கொண்ட அணி ஆகியவை பங்கேற்ற விறுவிறுப்பான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.
அங்கிருந்தவர்களிடையே உரையாற்றிய திரு. அஜித் தோவல், இந்திய ராணுவ வீரராகவும் உண்மையான பெங்கால் சாப்பராகவும் தமது தந்தை தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார் என்று கூறினார்.
பெங்கால் சாப்பர்சின் போர் நினைவுச் சின்னத்தை பார்வையிட்ட திரு. தோவல், தியாகிகளின் நினைவாக அமைந்துள்ள அவ்விடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் புது தில்லிக்கு புறப்பட்டு சென்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1697675
----
(रिलीज़ आईडी: 1697744)
आगंतुक पटल : 193