சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நியமனம்

இடுகை இடப்பட்ட நாள்: 13 FEB 2021 10:12AM by PIB Chennai

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதி மன்றத்தின் நீதிபதியான திரு. புலிகோரு வெங்கட சஞ்சய் குமாரை, மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இந்திய குடியரசுத் தலைவர் நியமனம் செய்துள்ளார்.

இதுகுறித்த அறிவிப்பை சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் நீதித்துறை நேற்று வெளியிட்டது. கடந்த 2008-ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும், 2010-ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியாகவும் அவர் நியமிக்கப்பட்டார்.

14.10.2019 அன்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு அவர் மாற்றல் செய்யப்பட்டார்.

பம்பாய் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக திருமதி. புஷ்பா விரேந்திர கணேடிவாலாவை இந்திய குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.

 2021 பிப்ரவரி 13-ஆம் தேதி முதல் ஓராண்டு காலம் அவர் இந்த பதவியை வகிப்பார்.

இதற்கான ஆணையை மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் நீதித்துறை நேற்று வெளியிட்டது. திருமதி. புஷ்பா விரேந்திர கணேடிவாலா, 2007-ஆம் ஆண்டு அக்டோபர் 26-ஆம் தேதி மாவட்ட நீதிபதியாக தனது பணியை துவங்கினார். மகாராஷ்டிராவில் பல்வேறு நீதித்துறை சார்ந்த பதவிகளையும் அவர் வகித்தார்.

-------


(வெளியீட்டு அடையாள எண்: 1697733) வருகையாளர் எண்ணிக்கை : 254
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Manipuri