வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
அம்ருத் திட்டத்தின் கீழ், ரூ.78,910 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன
Posted On:
11 FEB 2021 5:22PM by PIB Chennai
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவாகரத்துறை இணையமைச்சர் திரு. ஹர்தீப் சிங் பூரி மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
* நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட நகரங்களில், புதுப்பிப்பு மற்றும் நகர்ப்புற மாற்றத்துக்கான அடல் திட்டம்(அம்ருத்) கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
குடிநீர் மற்றும் வடிகால் துறைகளில் அடிப்படை நகர்ப்புற கட்டமைப்பை உருவாக்குவதில் இத்திட்டம் கவனம் செலுத்தியது. இத்திட்டத்தின் கீழ் 11 சீர்திருத்தங்களும் கட்டாயமாக்கப்பட்டன.
* பசுமை வளாகம் மற்றும் பூங்கா துறையில், மாநிலங்கள் 2,538 திட்டங்களை ரூ.1,577.83 கோடி மதிப்பில் மேற்கொண்டன. இவற்றில் ரூ.1000.96 கோடி மதிப்பிலான 1776 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் அம்ருத் திட்டத்தின் கீழ், 3,500 கோடி ஏக்கரில் பசுமை வளாகம் மற்றும் பூங்காங்கள் உருவாகின.
* அம்ருத் திட்டத்துக்கான மொத்த மத்திய செலவினம் ரூ.50,000 கோடி. இதில் மத்திய உதவித் தொகைக்காக ரூ.36,036 கோடி ஒதுக்கப்பட்டது. மீதத் தொகை நிர்வாக மற்றும் அலுவலக செலவு மற்றும் சீர்திருத்த ஊக்குவிப்பாக ஒதுக்கப்பட்டது.
* மாநிலங்கள் ரூ.81,226 கோடி மதிப்பிலான அம்ருத் திட்டங்களை மேற்கொண்டன. மத்திய உதவிக்கு மேல் மேற்பட்ட செலவை மாநிலங்கள் ஏற்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1697133
***
(Release ID: 1697214)