விவசாயத்துறை அமைச்சகம்

தற்சார்பு இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக ‘இனிப்பு புரட்சி’ இலக்கை எட்டவிருக்கும் தேசிய தேனீவளர்ப்பு & தேன் இயக்கம்

Posted On: 11 FEB 2021 4:24PM by PIB Chennai

நாட்டின் ஒருங்கிணைந்த விவசாய அமைப்பில் தேனீ வளர்ப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, தேசிய தேனீவளர்ப்பு & தேன் இயக்கத்திற்கு ரூ. 500 கோடியை மூன்று வருடங்களுக்கு (2020-12 முதல் 2022-23) வரை அரசு ஒதுக்கியுள்ளது.

தற்சார்பு இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தேனீ வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தேசிய தேனீவளர்ப்பு & தேன் இயக்கம், அறிவியல் பூர்வமான தேனீ வளர்ப்பின் மூலம்இனிப்பு புரட்சிஇலக்கை எட்டுவதை லட்சியமாகக் கொண்டுள்ள்து.

தேசிய தேனீவளர்ப்பு & தேன் இயக்கத்தின் கீழ் விழிப்புணர்வுக்காகவும்அறிவியல் பூர்வமான தேனீ வளர்ப்பு, தேனீ வளர்ப்பின் மூலம் பெண்களுக்கு அதிகாரமளித்தல், தேனீகளின் தாக்கம் குறித்த தொழில்நுட்ப விளக்கங்கள் மற்றும் வேளாண்/தோட்டக்கலையின் தர மேம்பாடு ஆகியவற்றில் திறன் வளர்த்தலுக்காகவும் 11 திட்டங்களுக்கு ரூ.2560 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த விவசாய அமைப்பின் ஒரு பகுதியாக விவசாயிகள்/நிலமற்ற தொழிலாளர்களால் தேனீ வளர்ப்பு செய்யப்படுகிறது. பயிர்களை பெருக்குவதில் பயனுள்ளதாக விளங்கும் தேனீ வளர்ப்பின் மூலம், விவசாயிகள் மற்றும் தேனீ வளர்ப்பாளர்களின் வருவாய் அதிகரிக்கிறது.

தேனீ வளர்ப்பின் மூலம் கிடைக்கும் தேன் மற்றும் இதர பொருட்கள் பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1697113

----


(Release ID: 1697187) Visitor Counter : 313