கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

வெற்றிகரமான சர்வதேச நடைமுறைகளின்படி மத்திய துறைமுகங்களை நிர்வகிப்பதற்கான முக்கிய துறைமுக அதிகாரங்கள் மசோதா, 2020 – இன்று நாடாளுமன்றம் நிறைவேற்றியது

Posted On: 10 FEB 2021 4:05PM by PIB Chennai

முக்கிய துறைமுக அதிகாரங்கள் மசோதா, 2021-ஐ நாடாளுமன்றம் இன்று நிறைவேற்றியது. துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித்துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு மன்சுக் மாண்டவியா இம்மசோதாவை மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்தார். மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அது கொண்டு செல்லப்படும்.

துறைமுக உள்கட்டமைப்பின் விரிவாக்கத்தை ஊக்குவிப்பதையும், வணிகம் மற்றும் வர்த்தக வசதிகளை அளிப்பதையும் நோக்கமாகக் கொண்ட இந்த மசோதா, முடிவெடுக்கும் முறையைப் பரவலாக்கி, முக்கிய துறைமுகங்களின் நிர்வாகத்தை செம்மையாக்கும். வேகமாகவும், வெளிப்படையான முறையிலும் முடிவுகளை எடுப்பதை ஊக்குவித்து, பங்குதாரர்களுக்கு பலனளித்து, சிறப்பான திட்ட செயலாக்கத்திற்கு வழிவகுக்கும்.

 

வெற்றிகரமான சர்வதேச நடைமுறைகளின்படி மத்திய துறைமுகங்களின் நிர்வாக வழிமுறைகளை மாற்றியமைத்து, முக்கிய துறைமுகங்களின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வர இம்மசோதா உதவும்.

முடிவெடுப்பதில் முழு தன்னாட்சியை வழங்குவதன் மூலமும், முக்கிய துறைமுகங்களின் நிறுவன கட்டமைப்பை நவீனப்படுத்துவதன் மூலமும் துறைமுகங்களுக்கு அதிகாரமளித்து அவற்றின் செயல்திறனை அதிகரிக்க இந்த மசோதா வழிவகுக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1696767

------


(Release ID: 1696806) Visitor Counter : 255