எஃகுத்துறை அமைச்சகம்

இரும்பு, எஃகு துறை : ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மேம்பாடு

Posted On: 10 FEB 2021 12:52PM by PIB Chennai

மத்திய எஃகு அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், மாநிலங்களவையில் இன்று எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

இரும்பு, எஃகு துறையில் ஆராய்ச்சியையும், மேம்பாட்டையும் ஊக்குவிக்க, மத்திய எஃகு அமைச்சகம் கடந்த 2018-19, 2019-2020ம் நிதியாண்டுகளில் தலா ரூ.15 கோடி ஒதுக்கியது

தொழில்நுட்ப மேம்பாடு/நவீனமயமாக்கம்/விரிவாக்கம் திட்டம் ஆகியவற்றின் ஒரு பகுதியாக கீழ்க்கண்ட ஆற்றல் திறன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற தொழில்நுட்பங்களை எஃகு தொழில்துறை மேற்கொண்டது:-

* தணிந்த உலர் கரியின் வீண் வெப்பத்திலிருந்து மின் உற்பத்தி

* சின்டர் ஆலையின் வீண் வெப்பத்திலிருந்து மின் உற்பத்தி

* உலையில் பிஎல்டி கருவி  (Bell Less Top Equipment (BLT) in Blast Furnace )

* உலையில் மேல் அழுத்த மீட்பு டர்பைன்.

* உலையில் துளை வழியாக நிலக்கரி செலுத்தும் முறை

* உலையில் வீண் வெப்பம் மீட்கும் முறை.

* எரிசக்தி கண்காணிப்பு மற்றும் மேலாண்மை அமைப்பு

* எஃகு உருக்கும் இடத்தில் இரண்டாம் நிலை புகையை வெளியேற்றும் முறை

* ரோலிங் ஆலைகளின் மறு வெப்பமாக்கல் உலைகளில் மீளுருவாக்கம் பர்னர்கள்.

* ரோலிங் ஆலைகளில்  அதிக வெப்பநிலையில் சூடாக்கும்  செயல்முறை.

* உலைகளை மீண்டும் சூடாக்குவதை தவிர்க்க நேரடி உருட்டல் செயல்முறை.

* உற்பத்தியாகும் கழிவுகள், எஃகு ஆலைக்குள் மீண்டும் சுத்திகரிக்கப்படுகின்றன. உலையில் உள்ள திடக் கழிவுகள் சிமென்ட் ஆலைகளுக்கு விற்கப்படுகின்றன.

* வாயு கழிவுக்கள், உலைகளை மீண்டும் சூடாக்கவும், மின் உற்பத்திக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

* எஃகு கழிவுகளை சாலைகள் போடுவதற்கும், கட்டுமானங்களும் பயன்படுத்துவதற்கான ஆராய்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1696701

****



(Release ID: 1696762) Visitor Counter : 153


Read this release in: English , Urdu , Manipuri , Punjabi