நிதி அமைச்சகம்
மத்திய பட்ஜெட்டில் தெரிவித்திருந்தவாறு “குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுகை” என்னும் கொள்கையை அரசு பின்பற்றுகிறது: நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன்
Posted On:
08 FEB 2021 6:57PM by PIB Chennai
2021-22-ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் தெரிவித்திருந்தவாறு “குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுகை” என்னும் கொள்கையை அரசு பின்பற்றுகிறது என்று நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று கூறினார்.
பிஎச்டி வர்த்தகம் மற்றும் தொழில்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த மத்திய பட்ஜெட் 2021-22 விளக்கக் கூட்டத்தில் காணொலி மூலம் உரையாற்றிய அவர், பலவகையிலும் நன்மைகள் பயக்கக்கூடிய நடவடிக்கைகளின் அதிகளவில் அரசு செலவழித்துள்ளதாக கூறினார்.
இந்த நடவடிக்கைகளை தொழில்துறை வரவேற்றுள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர், மக்களுக்கு அதிகாரமளிப்பதே உண்மையான மக்கள் நல நடவடிக்கை என்பதை அரசு நம்புவதாக கூறினார்.
நிதி பற்றாக்குறையை அரசு கவனமுடன் கண்காணித்து வருவதாக கூறிய நிதி அமைச்சர், தற்போதைய சூழ்நிலையில் நிதி பற்றாக்குறையை தவிர்க்க முடியாது என்றும், ஆனால் அதை கவனத்துடன் கையாள வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் பேசிய திருமதி நிர்மலா சீதாராமன், பொருளாதாரத்திற்கு புத்தாக்கம் அளிப்பதற்கான நிதி தொகுப்பை வழங்க அரசால் முடியும் என்றும், ஆனால், நீண்ட கால உள்கட்டமைப்புக்கான நிதியை ஏற்பாடு செய்வதே வளர்ச்சி நிதி நிறுவனத்தின் பணி என்றும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1696267
*******************
(Release ID: 1696349)
Visitor Counter : 237