பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

இந்திய பழங்குடியினர் ஆதி மகோத்சவ விழாவில், பழங்குடியின கைவினை கலைஞர்கள் தினம் கொண்டாடப்பட்டது

Posted On: 08 FEB 2021 2:01PM by PIB Chennai

தில்லியில் நடைபெறும் இந்திய பழங்குடியினர் ஆதி மகோத்சவ விழாவில், பழங்குடியின கைவினை கலைஞர்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

நாடு முழுவதும் உள்ள பழங்குடியினரின் கைவினைப் பொருட்கள் மற்றும் கலாச்சாரத்தை பிரபலபடுத்துவதற்காக ஆதி மகோத்சவம் கடந்த 2017ம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது.

தற்போது புது தில்லியில் உள்ள  இந்திய தேசிய ஏர்வேஸ் மைதானத்தில் ஆதி மகோத்சவம் பிப்ரவரி 15ம் தேதி வரை நடக்கிறது. இங்கு நாடு முழுவதும் உள்ள பழங்குடியின கைவினை கலைஞர்கள் 200க்கும் மேற்பட்ட  கடைகள் அமைத்து, கைத்தறி துணிகள், பானைகள், அப்பளம் என  பல   கைவினை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இங்கு பழங்குடியின கைவினை கலைஞர்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1696139

********



(Release ID: 1696347) Visitor Counter : 150