பாதுகாப்பு அமைச்சகம்

பாதுகாப்புத்துறைக்கான பட்ஜெட் செலவினம் குறைப்பு

Posted On: 08 FEB 2021 2:19PM by PIB Chennai

மாநிலங்களவையில் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக், எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

* கடந்த 2019-20ம் நிதியாண்டில் பாதுகாப்புத்துறை செலவினம்
ரூ. 4,31,010.79 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. ஆனால், உண்மையான செலவினம் ரூ. 4,52,996 கோடியாக இருந்தது.

* 2020-21ம் நிதியாண்டில் பாதுகாப்புத்துறை செலவினம் ரூ.4,71,378 கோடியாக மதிப்பிடப்பட்டது. ஆனால், உண்மையான செலவினம் 2020 டிசம்பர் வரை, 3,38,630.9 கோடியாக இருந்தது.

* மலபார் கூட்டுப் பயிற்சி, இந்தியா - அமெரிக்கா கடற்படை இடையே கடந்த 1992-ம் ஆண்டு இருதரப்பு ஆண்டு பயிற்சியாக தொடங்கியது. கடந்த 2015-ம் ஆண்டு இதில் ஜப்பான் கடற்படை இணைந்தது. 2020-ம் ஆண்டில், நடந்த 24வது கூட்டுப் பயிற்சில் ஆஸ்திரேலிய கடற்படையும் இணைந்தது. ஒன்றாக இணைந்து செயல்படுதல், ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மலபார் கடற்படை பயிற்சி அதிகரித்தது.

* பாதுகாப்புத்துறையில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களான பிஇஎம்எல் நிறுவனம், கார்டன் ரீச் சிப் பில்டர்ஸ் மற்றும் இன்ஜினியர்ஸ் நிறுவனம் மற்றும் மிஸ்ரா தாது நிகாம் நிறுவனம் ஆகியவற்றில் நிர்வாக கட்டுப்பாடு மாறாத அளவுக்கு, செபி விதிமுறைகள் படி குறைந்த அளவிலான பொது பங்குகளை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

* இந்திய தரைப்படையில் ஆண்கள் 12,18,036 பேரும், பெண்கள் 6807 பேரும் உள்ளனர். பெண்கள் சதவீதம் 0.56.

* விமானப்படையில் ஆண்கள் 1,46,727 பேரும், பெண்கள் 1607 பேரும் உள்ளனர். பெண்கள் சதவீதம் 1.08.

* கடற்படையில் ஆண்கள் 10,108, பெண்கள் 704 பேரும் உள்ளனர். பெண்கள் சதவீதம் 6.5.

* ரூ.1000 கோடிக்கு மேலான மதிப்பில், மென்பொருள் வரையறுக்கப்பட்ட ரேடியோ (Software Defined Radio (Tactical) கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் மற்றும் பாதுகாப்புத்துறை பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இடையே கடந்த 8-ம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1696143

******

 



(Release ID: 1696260) Visitor Counter : 132


Read this release in: English , Urdu , Marathi , Manipuri