வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியா, இங்கிலாந்து நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
08 FEB 2021 2:42PM by PIB Chennai
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், சர்வதேச வர்த்தகத்திற்கான இங்கிலாந்து அமைச்சர் திருமிகு எலிசபெத் ட்ரஸ் ஆகியோர் பிப்ரவரி 6-ஆம் தேதி புதுதில்லியில் சந்தித்து, இந்தியா-இங்கிலாந்து இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள். இந்த சந்திப்பின்போது மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் புரியும் உடனிருந்தார்.
இரண்டு நாடுகளின் வர்த்தகம் சார்ந்த விஷயங்களின் பரஸ்பர புரிதலுடன் இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்தியா- இங்கிலாந்து இடையேயான நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்தவும், மேம்படுத்தப்பட்ட வர்த்தக கூட்டணியின் வாயிலாக இரண்டு நாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் 2 அமைச்சர்களும் உறுதி அளித்தனர். கொவிட்- 19-க்கு எதிரான ஒத்துழைப்பு மற்றும் இருபுறமும் சந்தைப்படுத்துதலில் உள்ள தடைகளை நீக்குவது தொடர்பாகவும் இருவரும் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1696154
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1696250)
வருகையாளர் எண்ணிக்கை : 185