அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

‘அறிவியலுடன் ஈடுபாடு’ என்ற நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள், முதல்வர்கள் பங்கேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 08 FEB 2021 9:59AM by PIB Chennai

அறிவியல் மனநிலை, தொடர்ச்சியான கற்றல் கலாச்சாரம் ஆகியவற்றை வளர்க்கவும், அறிவியல் தொழில்நுட்பத்தை முன்னணியில் கொண்டு வருவதற்கும், மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் ஆகியோரை ஈடுபடுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

சமீபத்தில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், அறிவியல் தொழில்நுட்பத் துறை செயலாளர் பேராசிரியர் அசுதோஷ் சர்மா பேசுகையில், ‘‘அறிவியலுடன் ஈடுபடுத்தும் சில நிகழ்ச்சிகள் பள்ளியில் உள்ளன. இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் நாம் அதிகளவிலான பள்ளிகளை ஈடுபடுத்த முயற்சிக்கிறோம். இதில் மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளியின் தலைவர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும். இளைஞர்கள், நாட்டின், சமுதாயத்தின் சொத்தாக மாற உதவ வேண்டும்’’ என்றார். இந்நிகழ்ச்சியில் 8 மாநிலங்களிலிருந்து 100க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் பங்கேற்றனர்.

‘‘ஊக்குவிக்கும் வகையிலும், மனநிலையை மாற்றி, அதிகளவிலான பார்வையாளர்களை ஈர்க்கும் விதத்திலும் அறிவியல் கற்பிக்கப்பட வேணடும் எனவும், 3 லட்சம் பள்ளிகளை சென்றடைந்து, இதுவரை 10 லட்சம் கருத்துக்களை உருவாக்கிய அறிவியல் தொழில்நுட்ப துறையின்மனக்திட்டத்திலிருந்து நாம் கற்றுக் கொடுக்க வேணடும்’’ எனவும் பேராசிரியர் அசுதோஷ் சர்மா வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1696067

******

 


(வெளியீட்டு அடையாள எண்: 1696221) வருகையாளர் எண்ணிக்கை : 158
இந்த வெளியீட்டை படிக்க: Manipuri , Bengali , English , Urdu , हिन्दी